ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டர்.. 5 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ஊடுருவல் முயற்சி தடுப்பு!

By Ansgar R  |  First Published Oct 26, 2023, 7:35 PM IST

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் காவல்துறை மற்றும் ராணுவம் நடத்திய எதிர் ஊடுருவல் நடவடிக்கையின் போது 5 லஷ்கர் பயங்கரவாதிகள் இன்று சூட்டு கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டாரில் தான் இன்று அக்டோபர் 26ம் தேதி அந்த என்கவுன்டர் நடந்தது. இன்று நடந்த முதல் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக ராணுவத்தால் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்பட்ட ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினரும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றனர். இது போன்ற ஆபரேஷன் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

ஆந்திராவில் நாயுடு; தெலங்கானாவில் பாஜக: பவன் கல்யாணின் பலே கணக்கு!

ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் கூறுகையில், 16 பயங்கரவாத ஏவுதளங்கள் எல்லைக் கோட்டிற்கு அப்பால் இன்னும் செயல்பட்டு வருவதாகவும், பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை விரட்டும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளின் கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள 15வது படையின் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. "காஷ்மீரில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் பங்கு" என்ற தலைப்பில் இந்த சந்திப்பின் பொது விவாதிக்கப்பட்டது. "உள்ளூர் ஆட்சேர்ப்பு வெகுவாக குறைந்துள்ளதால் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த ஆண்டு யூனியன் பிரதேசத்தில் கொல்லப்பட்ட 46 பயங்கரவாதிகளில் 37 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒன்பது பேர் மட்டுமே உள்ளூர்வாசிகள் என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் 33 ஆண்டுகால பயங்கரவாதத்தில் உள்ளூர் பயங்கரவாதிகளை விட வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகமாக இருப்பது இதுவே முதல் முறை.

மஹுவா மொய்த்ரா ஆஜராக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவு!

click me!