Jacqueline Fernandez: ரூ.52லட்சத்தில் குதிரை, ரூ.27 லட்சத்தில் பூனை: ஜாக்குலினுக்கு சுகேஷ் அளித்த 11பரிசுகள்

Published : Apr 30, 2022, 04:40 PM IST
Jacqueline Fernandez:   ரூ.52லட்சத்தில் குதிரை, ரூ.27 லட்சத்தில் பூனை: ஜாக்குலினுக்கு சுகேஷ் அளித்த 11பரிசுகள்

சுருக்கம்

jacqueline Fernandez : சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7.27 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ள நிலையலி் அவருக்கு சுகேஷ் சந்திரசேகர் அளித்த பரிசுப்பட்டியல்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7.27 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ள நிலையலி் அவருக்கு சுகேஷ் சந்திரசேகர் அளித்த பரிசுப்பட்டியல்கள் வெளியாகியுள்ளன.

மருந்து நிறுவனர் மற்றும் தொழிலதிபர் மனைவி மிரட்டி ரூ.215 கோடி பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தொழிலதிபரின் மனைவியிடம் பறித்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து செலவிட்டதும் தெரியவந்தது.

அதிலும் குறிப்பாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுடன் சுகேஷ் சந்திரசேகர் நெருக்கமாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஜாக்குலினுக்கு ரூ.5.71 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் கொடுத்ததும், ஜாக்குலின் குடும்பத்தினருக்கு 1.70 லட்சம் அமெரிக்க டாலர்களும், 27ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் வழங்கியதும் தெரியவந்தது.

இந்த வழக்குத் தொடர்பாக நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணைக்கு அழைத்தனர். ஏறக்குறைய 7 மணிநேரம் ஜாக்குலினிடம் அமாலக்கப்பிரிவுவிசாரணை நடத்தியதில் சுகேஷிம் தான் பெற்ற பரிசுப் பொருட்கள், பணம், நகைகள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்தார்.

இதையடுத்து ஜாக்குலின் பெர்னான்டஸ் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.7.12 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை, ரொக்கம் உள்ளிட்ட ரூ.7.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜாக்குலினுக்கு சுகேஷ் அளித்த பரிசுப் பட்டியல்கள்: 

  1. ரூ.9 லட்சத்தில் தலா 3 பெர்சியன் நாட்டு பூனைகள்
  2. ரூ.52 லட்சத்தில் அரேபியக் குதிரை
  3. 15 ஜோடி வைரத் தோடுகள்
  4. விலைமதிப்புள்ள சாப்பிடும் தட்டுகள்
  5. கூசி, சேனல் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஹேண்ட் பேக்குகள்
  6. கூசி நிறுவனத்தின் ஜிம் ஆடைகள்
  7. லூயிஸ் வியூட்டன் நிறுவனத்தின் இரு விலை உயர்ந்த ஷூக்கள்
  8. மினி கூப்பர் கார்
  9. ரோலக்ஸ் வாட்ச்
  10. ஜாக்குலின் சகோதரிக்கு பிஎம்டபிள்யு கார் பரிசு
  11. ஜாக்குலின் தாயாருக்கு போர்ச்சே கார்

ஆகிய பரிசுகள் கொடுக்கப்பட்டன


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!