மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதீத கனமழை பெய்யுமாம் ! இந்திய வானிலை மையத்தின் அதிரடி எச்சரிக்கை !!

By Selvanayagam PFirst Published Aug 10, 2019, 7:36 PM IST
Highlights

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளில் அதீத கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.  இதன் காரணமாக தமிழகம், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

தென்மேற்குப் பருவமழை காரணமாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில்  கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்த மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்ட்ராவில் 30 பேர், குஜராத்தில் 98 பேர், கேரளாவில் 28 பேர், கர்நாடகாவில் 6 பேர் என மொத்தம் 162 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டு அறிக்கையில் மேற்கு  தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளில் இன்று இரவு அதீத கன மழை பெய்யும். நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. 

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்யும் நிலையில் நாளை முதல் மழை குறையும். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் கன மழை பெய்ய  வாய்ப்பு உள்ளது என கூறி உள்ளது.

click me!