கர்நாடக அமைச்சர் சிவக்குமார் வீட்டில் 4-வது நாளாக ஐடி ரெய்டு

 
Published : Aug 05, 2017, 12:25 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
கர்நாடக அமைச்சர் சிவக்குமார் வீட்டில் 4-வது நாளாக ஐடி ரெய்டு

சுருக்கம்

IT raid conitinues for 4th day in shivakumar house

கர்நாடக அமைச்சர் சிவக்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 4-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு சோதனை முடிவதாக கூறப்பட்ட நிலையில் இன்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் தங்குவதற்கு அமைச்சர் சிவக்குமார் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவக்குமாரின் வீடு உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது பல கோடி ரூபாய், நகை மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இந்த சோதனை, நேற்றிரவே முடிவதாக கூறப்பட்ட நிலையில் இன்று 4-வது நாளாகவும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் சிவக்குமாரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சோதனையை விரைந்து முடிக்குமாறு அவரது சகோதரருரும், எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்