துணை ஜனாதிபதி யார்? - நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது தேர்தல்!!

First Published Aug 5, 2017, 10:08 AM IST
Highlights
vice president election started


இந்தியாவின் புதிய துணை குடியரசு தலைவரை  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடங்கியது. எம்.பி.,க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்து வருகின்றனர்.

ஆளும் பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான, எதிர்க்கட்சிகளின் சார்பில், மேற்கு வங்க முன்னாள் கவர்னரும், மஹாத்மா காந்தியின் பேரனுமான, கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். 

இன்று நடக்கும் தேர்தலில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் வாக்களித்து வருகின்றனர். டில்லியில் உள்ள, நாடாளுமன்ற வளாகத்தில் இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கிய ஓட்டு பதிவு, மாலை, 5:00 மணிக்கு நிறைவடையும். அதன்பின், தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண் ணப்பட்டு,இன்று இரவே முடிவு வெளியாகும். இன்று நடக்கும், துணை ஜனாதிபதி தேர்தலில், பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றால் முதல் முறையாக பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ், பின்னணி உடை யவர்கள் ஒரே நேரத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் என நாட்டின் மூன்று முக்கிய பொறுப்புகளை வகிக்கும் நிலை உருவாகும்.

தொடர்ந்து, 10 ஆண்டுகள், துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபா தலைவராகவும் பணியாற்றிய, ஹமீது அன்சாரியின் பதவிக்காலம், வரும்,10ம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!