
ஜெயலலிதாவின் விசுவாசி பூங்குன்றனிடம் கோடி கோடியாக சொத்துக்கள் உள்ளதாகவும், அந்த சொத்துக்கள் எப்படி இவருக்கு வந்தது, இந்த சொத்துக்கள் அனைத்தும் யாருக்கு சொந்தமானது என டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கார்டனைப் பொறுத்தவரையில், சர்ச்சைகளில் சிக்கும் பெருமை பூங்குன்றனுக்கு சர்ச்சை மன்னன் என்ற பெருமை உண்டு. இவர் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் நிர்வாக பொறுப்பிலும் மேலும் பல நிறுவனங்களுக்கு இயக்குனராக இருந்து வருகிறார்.
அதுமட்டுமல்ல அதிமுக தலைமை அலுவலகக் கட்டடங்களே இவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. போயஸ் கார்டனில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும், பூங்குன்றனைத் தாண்டிச் செல்லாது. ஜெயலலிதாவிடம் நேரடியாகப் பேசக் கூடியவரும் இவர்தான், ஜெயலலிதா உயிரொடு இருந்தபோது அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார் பூங்குன்றன்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் நம்பிக்கை நாயகனான இந்த பூங்குன்றனை டெல்லிக்கு அழைத்த வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவருக்கு 350 கோடி ரூபாய் சொத்துக்கள் எப்படி இவருக்கு வந்தது, இந்த சொத்துக்கள் அனைத்தும் யாருக்கு சொந்தமானது என துருவித் துருவி விசாரணை நடத்தினர். இந்த சொத்துக்கள் பூங்குன்றனுக்கு சொந்தமானதா? ஜெயலலிதா அல்லது அவரது தோழி சசிகலாவிற்க்கு சொந்தமானதா? பினாமியாக இவர் இருக்கிராறா என அதிகாரிகள் அதிரடியாக விசாரித்து வருகின்றனர் என பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆமாம் எதற்காக இந்த கிடுக்குப்பிடி விசாரணை? பூங்குன்றனின் அப்பா, சசிகலாவுக்கு ஆசிரியராக இருந்தவர். ஆரம்பத்திலிருந்தே அவர்களது குடும்பத்தின் மீது சசிகலாவுக்கு பாசம் உண்டு. இந்த பாசத்தினாலே போயஸ் கார்டனில் ஜெயலலிதாவிடம் செர்த்துவிட்டார். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக இருந்து வருகிறார் இதனால் பூங்குன்றனிடம் இந்த விசாரணை என தெரிகிறது. இது சசிகலாவின் குடும்பத்தின் மீது மத்திய அரசு நடத்தும் அடுத்த தாக்குதாலாகவே சொல்லப்படுகிறது.