
மகாராஷ்டிரா மாநிலம் சந்தரபூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இதையடுத்து, அந்தப் பொருள் குறித்துஆய்வு செய்ய பெங்களூரு இஸ்ரோ நிலையத்திலிருந்து ஆய்வுக்குழுவினர் விரைந்துள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரோ நிறுவனம் தனது ஃபேஸ்புக்பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள பவான்பூர் கிராமத்தில் கடந்த 3ம் தேதி மாலைப் பொழுதிதில் வானிலிருந்து ஏதோ மின்னும் பொருள் ஒன்று தரையில் விழுந்துள்ளது. சிலிண்டர் போன்ற வடிவத்தில், உலோகத்திலான வளையம் பொருத்தப்பட்டுள்ளது. மாவட்டநிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கினங்க, இஸ்ரோ சார்பில் ஆய்வாளர்கள் குழுவினர் பவான்பூர் கிராமத்துக்கு சென்று, அந்த பொருள் குறித்து ஆய்வு நடத்த உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
வானிலிருந்து விழுந்த இந்த மர்மப் பொருள் குறித்து ஏராளமானோர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த பொருள் விழும்போதும் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், சிலர் செயற்கைக்கோளின் பாகங்கள், அல்லது ராக்கெட்டின் உதிரிபாகங்களாக இருக்கலாம் எனவும் சமூக ஊடகங்களில் தகவல்கள்பரவுகின்றன.
செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் காலம் முடிந்தபின் கடல்பகுதியை நோக்கி பாயும், அப்போது பூமியின் நீள்வட்டப் பாதைக்குள் நுழையும்போது உடைந்து சிதறும் அப்போது உடையும் பாகங்கள் பல்வேறு திசைகளிலும் விழும்.அதுபோல் மகாராஷ்டிராவிலும் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது
கடந்த 2021, பிப்ரவரி மாதம் சீனாவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்ட சாங் செங் 3பி ஒய்77 ரக ராக்கெட்டின் 3-வது கட்டபாகங்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுவரை சீன அதிகாரிகளிடமும் இது குறித்து யாரும் உறுதி செய்யவில்லை.
சந்திரபூர் கிராமத்துக்குச் செல்லும் இஸ்ரோ அதிகாரிகள் வானிலிருந்துவிழுந்த பொருள் குறித்து ஆய்வு செய்தபின்னரே அது சீன ராக்கெட்டின் ஒரு பகுதியா எனத் தெரியவரும். ஆனால், வானிலிருந்து விழும் செயற்கைக்கோள், ராக்கெட்டின் உதரிபாகங்கள் பெரும்பாலும் பூமியின் வட்டப்பாதைக்குள் வந்தவுடனே எரிந்துவிடும். இதுபோன்று நிலப்பகுதியில் விழுவது மிகவும் அரிதான நிகழ்வு எனக் கூறப்படுகிறது.