செயலிழந்த MT-1 செயற்கைக் கோளை மீட்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி!

Published : Mar 07, 2023, 11:49 PM IST
செயலிழந்த MT-1 செயற்கைக் கோளை மீட்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி!

சுருக்கம்

விண்வெளியில் செயலிழந்த MT-1 செயற்கைக் கோளை பூமியின் வளிமண்டலத்துக்குக் மீட்டுக் கொண்டுவரும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி பெற்றுள்ளது.

விண்ணுக்கு அனுப்பிய செயற்கைக் கோள்கள் செயல் இழந்தால் அவற்றை மீண்டும் பூமியின் வளிமண்டலப் பகுதிக்கு மீட்டுவரும் கடினமான பணியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பிரான்ஸ் நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து மேகா டிரோபிகியூஸ்-1 (Megha-Tropiques - 1) என்ற செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பின. இந்தச் செயற்கைக்கோள் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியின் வானிலை மற்றும் பருவநிலை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த செயற்கைகோள் தனது 3 ஆண்டு ஆயுட்காலத்தை பூர்த்தி செய்து செயலற்றுவிட்டது. செயலிழந்து போன இந்தச் செயற்கைக்கோளை மீட்க இஸ்ரோ முடிவு செய்த்து.

Solar Eclipse 2023 in India: ஆண்டின் முதல் கிரகணமே ஹைபிரிட் சூரிய கிரகணம்! என்று, எப்படி பார்க்கலாம்?

எம்.டி.1 செயற்கைக்கோளை விண்வெளியில் அது இருக்கும் இடத்தில் இருந்து பூமியின் வளிமண்டல அடுக்கு அமைந்து பகுதி வரை கொண்டுவர இஸ்ரோ தீர்மானம் செய்தது. அதன்படி செவ்வாய்க்கிழமை மாலை 1000 கிலோ எடை கொண்ட எம்.டி.1 செயற்கைகோளை மீட்கும் முயற்சி நடைபெற்றது.

இன்று மாலை 4.30 மணி அளவில் தொடங்கிய இந்தப் பணி விரைவிலேயே வெற்றிகரமாக முடிந்தது. நான்கு 11 நியூட்டன் உந்திகள் மூலம் மாலை 4.32 மணிக்கும் இரவு 6.22 மணிக்கும் இரண்டு டி-பூஸ்ட்டர்கள் செயல்படுத்தப்பட்டன. பூமியின் வளிமண்டலத்தின் அடர்த்தியான அடுக்குகளுக்குள் நுழைந்ததும் செயற்கைக்கோள் எரிந்து பசிபிக் கடலில் விழுந்தது. செயற்கைக் கோளின் பெரிய பகுதி எதுவும் எஞ்சி இருக்கவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது” என இஸ்ரோ தெரிவிக்கிறது.

இதற்கான அனைத்து பணிகளும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் மையத்தில் மேற்கொள்ளப்பட்டன. 

கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரோ, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, விண்வெளிக் குப்பைகளைத் தணிப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய விண்வெளிச் சொத்துக்களைப் பாதுகாப்பது மற்றும் விண்வெளிப் பொருட்களைக் கண்காணிப்பது ஆகியவற்றுக்குத் தேவையான திறனை உள்நாட்டிலேயே உருவாக்குவதிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. விண்வெளி இயக்கத்தை பாதுகாப்பாகவும் நிலையாகவும் நிர்வாகிக்க இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆசனவாய் இல்லாமல் பிறந்த குழந்தை! அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றிய மருத்துவர்கள்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!