ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 7 செயற்கை கோளுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்!

By vinoth kumar  |  First Published Jul 30, 2023, 6:52 AM IST

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகளை விண்ணில் ஏவப்பட்டு வருகிறது. 


ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் இன்று காலை 6.30 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகளை விண்ணில் ஏவப்பட்டு வருகிறது. அந்தவகையில் பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் ஜூலை 30ம் விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஸ்கூல்ல ஆசிரியர் செய்ற வேலைய பாத்தீங்களா.. வசமாக சிக்கியதால் அதிரடி ஆக்ஷன் எடுத்த டிஇஓ..!

சிங்கப்பூரின் இந்த DS-SAR செயற்கைக்கோள் ரேடார் இமேஜிங் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. 

இந்த ‘டிஎஸ்- சாட்’ என்ற பிரதான செயற்கைக்கோளை டிஎஸ்டிஏ (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி., இன்ஜினியரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் உடன் 6 செயற்கைக்கோள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகிறது. இது அனைத்து வானிலை தகவல்களையும், துல்லியமான படங்களையும் வழங்கும். ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது.

🇮🇳🇸🇬India-Singapore space partnership 🤝 marks another milestone with the launch🚀 of 7 Singaporean satellites🛰️ by Indian space agency ISRO today. Here is a thread (1/7)- https://t.co/qsbKoporsp

— India in Singapore (@IndiainSingapor)

 

இதையும் படிங்க;-  AC மற்றும் Sleeper இருக்கைகள்.. ரயிலில் தூங்கும் நேரம் மாற்றம் - மேலும் பல முக்கிய தகவல்கள்!

 

இந்நிலையில், இன்று காலை 6.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்  விண்ணில் பாய்ந்தது. சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்கள், அரியலூர் விஞ்ஞானியின் 3 நானோ செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்றது.

click me!