சபாஷ் இஸ்ரோ….310 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி சாதனை...!

By Asianet TamilFirst Published Nov 28, 2019, 6:21 PM IST
Highlights

இஸ்ரோ கடந்த 20 ஆண்டுகளில் 33 நாடுகளின் 310 செயற்கைகோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது.
 

 இஸ்ரோ கடந்த 20 ஆண்டுகளில் 33 நாடுகளின் 310 செயற்கைகோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் செலுத்தியது. 48 நாட்கள் பயணத்துக்கு பிறகு கடந்த செப்டம்பர் 7ம் தேதியன்று நிலவில் தரையிறங்கும் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக அந்த முயற்சி தோல்வி கண்டது. இதனால் விஞ்ஞானிகள் கடும் நெருக்கடியில் இருந்தனர். மேலும் அடுத்து மேற்கொள்ளும் விண்வெளி நடவடிக்கையில் எந்தவித தவறும் நேர்ந்து விடாது என்ற அழுத்தமும் இஸ்ரோவுக்கு இருந்தது. 

Latest Videos

இந்நிலையில் இஸ்ரோ நேற்று பூமியை கண்காணித்து துல்லியமாக தகவல்களை அளிப்பதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ வகை செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.சி. சி-47 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் ஏவியது. மேலும் அனைத்து செயற்கைகோள்களையும் திட்டமிட்டப்படி சுற்றுவட்ட பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தியது. அமெரிக்காவின் 13 நானோ செயற்கைகோள்களை வெற்றிகரமாக சுற்றவட்டப்பாதையில் நிலை நிறுத்தியதையடுத்து இதுவரை 33 நாடுகளின் 310 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

இஸ்ரோ, 1994 அக்டோபர் 15ம் தேதியன்று முதல்முறையாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. பின் 1999 மே 26ம் தேதியன்று  முதல்முறையாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இந்திய செயற்கைகோளுடன் கொரியா மற்றும் ஜெர்மனியின் 2 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது. அதுமுதல் இதுவரை இஸ்ரோ 33 நாடுகளின் 310 செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது.

click me!