கார்த்தி சிதம்பரத்தையும் தூக்கபோறோம்.. அமலாக்கத்துறையால் அதிர்ந்து போன ப.சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Nov 28, 2019, 6:20 PM IST
Highlights

இந்த வழக்கில் ப.சிதம்பரம் ஒன்றும் அப்பாவி இல்லை. மறைமுகமாக இவ்வழக்கில் அவருக்கு தொடர்பு உண்டு. இது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கு மட்டுமல்ல. மற்ற நிறுவனங்களிலும் சட்ட விரோதமாக அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்ததும் அடங்கி உள்ளது. அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீனில் இருக்கும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய காத்திருப்பதாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததையடுத்து, ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. 

அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார். ஆதலால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருப்பதால், தடை விலகுவதற்காக காத்திருக்கிறோம். 

மேலும், இந்த வழக்கில் ப.சிதம்பரம் ஒன்றும் அப்பாவி இல்லை. மறைமுகமாக இவ்வழக்கில் அவருக்கு தொடர்பு உண்டு. இது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கு மட்டுமல்ல. மற்ற நிறுவனங்களிலும் சட்ட விரோதமாக அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்ததும் அடங்கி உள்ளது. அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, துஷார் மேத்தா தன்னைப் பற்றி நீதிபதியிடம் தெரிவிப்பதைப் பார்த்த கார்த்தி சிதம்பரம் சிறிது நேரம் யாரையும் பார்க்காமல், எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமலும், நீதிபதியின் முகத்தைப் பார்க்காமலும் தலைகுனிந்த படியே இருந்தார்.

click me!