மீண்டும் ஜிஎஸ்டியுடன் சேர்த்து சேவைக் கட்டணம்.. ஆன்லைன் முன்பதிவுக்கு நாளை முதல் அமல்!!

By Asianet TamilFirst Published Aug 31, 2019, 5:38 PM IST
Highlights

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களுக்கு நாளை முதல் ஜிஎஸ்டியுடன் சேர்த்து சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக ரயில்வே துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ரயிலில் பயணம் செய்பவர்கள் முன்பதிவு செய்யும் வசதியை தற்போது ஆன்லைன் மூலமாக செய்து வருகின்றனர். இந்த வசதிக்கு சேவைக் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டிருந்தது. 

மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஏசி இல்லாத வகுப்புகளுக்கு 20 ரூபாயும், ஏசி வகுப்புகளுக்கு 40 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சேவைக் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சேவைக் கட்டணம் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு வசூலிக்கப்பட இருக்கிறது. அதில் ஏசி இல்லாத வகுப்புகளுக்கு 15 ரூபாயும், ஏசி வகுப்புகளுக்கு 30 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சேவைக்கட்டணத்துடன் சேர்த்து ஜிஎஸ்டி தொகையும் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலில் வர இருக்கிறது.
 

click me!