ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த விருப்பமில்லை... சிபிஐ கோரிக்கையை நிராகரித்து காவல் நீடிப்பு..!

Published : Sep 03, 2019, 03:18 PM ISTUpdated : Sep 03, 2019, 03:22 PM IST
ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த விருப்பமில்லை... சிபிஐ கோரிக்கையை நிராகரித்து காவல் நீடிப்பு..!

சுருக்கம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை மேலும் காவலில் வைத்து விசாரிக்க விரும்பவில்லை என சிபிஐ கூறிய நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

மும்பையை சார்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்று தருவதற்கு ரூ.305 கோடி சட்டத்திற்கு புறம்பாக பணப்பரிமாற்றம் செய்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த 20-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அப்போது, சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேத்தா ப.சிதம்பரத்தை மேலும் காவலில் வைத்து விசாரிக்க விரும்பவில்லை. காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்ற காவல் முடிந்துவிட்டதால், திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. 

ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்குமாறு கோரமாட்டோம் என்று சிதம்பரம் தரப்பு அளித்த உறுதியை அடுத்து சிபிஐ காவலை உச்சநீதிமன்றம் 5-வது முறையாக நீட்டித்துள்ளது. இதுவரை 5 முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவருக்கு 15 நாட்கள் காவல் தரப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

PNR Status: ட்ரெயின் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா? PNR ஸ்டேட்டஸ் செக் செய்ய சிம்பிளான வழிகள்!
Petrol Price Hike: மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..! அலரும் வாகன ஓட்டிகள்..