ஓஎன்ஜிசி ஆலையில் பயங்கர தீ விபத்து... 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

Published : Sep 03, 2019, 01:17 PM IST
ஓஎன்ஜிசி ஆலையில் பயங்கர தீ விபத்து... 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

சுருக்கம்

மும்பையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் நவி மும்பை பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி, சுத்திகரிப்பு ஆலை மற்றும் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்,  இன்று அதிகாலை ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியது.

மும்பையில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்தியாவில் உள்ள கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்தான் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு தேவையில் 70 சதவீதத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனமே பூர்த்தி செய்கிறது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைய உள்ளது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் நவி மும்பை பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி, சுத்திகரிப்பு ஆலை மற்றும் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்,  இன்று அதிகாலை ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியது.

 

இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

வெற லெவல் மரியாதை! பிரதமர் மோடிக்கு கார் ஓட்டியாக மாறிய ஜோர்டான் இளவரசர்.. வைரல் வீடியோ!
EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு