சொந்த மகளையே கொலை செய்த இந்திராணி முகர்ஜியால் ப.சிதம்பரத்திற்கு சதி.. நீதிமன்றத்தில் காரசார வாதம்..!

Published : Sep 25, 2019, 06:24 PM ISTUpdated : Sep 25, 2019, 06:29 PM IST
சொந்த மகளையே கொலை செய்த இந்திராணி முகர்ஜியால் ப.சிதம்பரத்திற்கு சதி.. நீதிமன்றத்தில் காரசார வாதம்..!

சுருக்கம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் கடந்த 11-ம் தேதி தொடர்ந்த வழக்கு இன்றோடு 5-வது நாளாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. முன்னதாக, ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் முன்பு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தில், ‘‘ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முதலீடு செய்ய சட்டபூர்வ அனுமதி வழங்கப்பட்டது.

அப்படியெனில் இங்கு எந்த இடத்தில் சட்டவிரோத பரிவர்த்தனை நடந்துள்ளது என்பது புரியவில்லை. இந்த வழக்கில் இதுவரை எந்த ஆதாரமோ அல்லது ஆவணங்களோ குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக இல்லை. அதேபோல கணக்கில் காட்டாத வங்கி கணக்கோ, சொத்தோ ப.சிதம்பரத்துக்கு கிடையாது. சொந்த மகளையே கொலை செய்த இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ப.சிதம்பரத்தை தற்போது சிபிஐ கைது செய்துள்ளனர். 

இதில் உண்மை இருந்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏன் இந்திராணி முகர்ஜி வாக்குமூலமாக தெரிவிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார். இதற்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 5-வது முறையாக வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!