International Yoga Day 2022 : சர்வதேச யோகா தினம் - எங்கு, எப்போது தோன்றியது.. வரலாறு தெரியுமா ?

Published : Jun 15, 2022, 01:18 PM ISTUpdated : Jun 15, 2022, 01:34 PM IST
International Yoga Day 2022 : சர்வதேச யோகா தினம் - எங்கு, எப்போது தோன்றியது.. வரலாறு தெரியுமா ?

சுருக்கம்

International Yoga Day 2022 : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. 

சர்வதேச யோகா தினம்

கடந்த சில ஆண்டுகளாக யோகாவின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில், சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த தினம் தொடங்கப்பட்டது. ஜூன் 21ம் தேதி அன்று யோகா தினம் நடத்த ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது. 

அது என்னவென்றால்,  இந்த தேதி வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாள் என்பதால் இது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது. இந்த தினத்தை கொண்டாடுவதற்காக 2014ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அன்று, இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி அசோக் முகர்ஜி ஐக்கிய பொதுச் சபையில் வரைவுத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அதற்கு 177 உறுப்பு நாடுகளிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது. 

யோகா தினம் 2022

அதில் யோகா தினத்தை ஒரு சிறப்பு நாளாக கொண்டாட ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து 2014ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அன்று, ஐக்கிய நாடுகள் சபை 69/131 தீர்மானத்தின் மூலம் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. யோகா என்பது சமஸ்கிருதத்திலிருந்து உருவான வார்த்தையாகும். இதன் பொருள் சேருதல் அல்லது ஒன்றுபடுவதாகும். யோகா என்பது உடல் மற்றும் மனதின் ஒன்றிணைவு என்று அர்த்தம். 

இது ஒருவரின் அன்றாட வாழ்க்கையில் ஒரு சீரான வாழ்க்கை முறையை பராமரிக்கிறது. முதன்முதலில் சர்வதேச யோகா தினம் 2015ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி அன்று உலகளவில் அனுசரிக்கப்பட்டது.  நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் உள்ள ஒருவரது உடல் வைரஸுடன் சண்டையிட்டு நோயிலிருந்து பாதுகாக்கப்படலாம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெவ்வேறு யோகா ஆசனங்கள் உதவுகின்றன. 

அவற்றை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிக அவசியம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வில்லை. இந்த ஆண்டு 75-வது சுதந்திர ஆண்டும் ஓராண்டுக்கு கொண்டாடப்பட்டு வருவதால், அதையொட்டி யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!