Fathers day 2023: தந்தையர் தின கொண்டாட்டத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே...!

By Kevin KaarkiFirst Published Jun 16, 2022, 4:22 PM IST
Highlights

Fathers Day 2023 | தாய்லாந்தில் தந்தையர் தினம் மன்னர் புமிபல் பிறந்த நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இவர் தாய்லாந்தின் மன்னராக இருந்து வந்தார். 

உலகில் முதல் முறையாக தந்தையர் தினம் ஜூன் 19 ஆம் தேதி 1910 ஆண்டு கொண்டாடப்பட்டது. தனது தந்தையை கொண்டாட நினைத்த பெண் ஒருவர் தான் தந்தையர் தினத்தை தோற்றுவித்தவர் ஆவார். அமெரிக்காவில் தான் முதல் முறையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. வாஷிங்டன்னில் முதல் முறையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அதன் பின் பல்வேறு நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தந்தையர் தினத்தை தோற்றுவித்தவரின் பெயர் சொனாரா ஸ்மார்ட் டாட் ஆகும். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார். அன்னையர் தினத்தை கொண்டாடிய பின் சொனாரா ஸ்மார்ட் டாட் தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என நம்பினார். இவரின் தாய் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த பின் உயிரிழந்து விட்டார். அதன் பின் ஆறு குழந்தைகளை வளர்த்தெடுத்த காரணத்தால், இவர் தனது தந்தையை கொண்டாட முடிவு செய்தார்.

உலக நாடுகளில் தந்தையர் தினம்:

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரம் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் தந்தையர் தின தேதி மாறுபடும். கத்தோலிக்க நாடுகளில் குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் தந்தையர் தினம் செயிண்ட் ஜோசப் தினம், மே 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பசிபிக் நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஃபிஜியில் செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

தாய்லாந்தில் தந்தையர் தினம் மன்னர் புமிபல் பிறந்த நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இவர் தாய்லாந்தின் மன்னராக இருந்து வந்தார். இவரின் பிறந்த நாள் டிசம்பர் 5 ஆம் தேதி ஆகும். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி தாய்லாந்தில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

விடுமுறை தினம்:

ஹால்மார்க் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி அதிக வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படும் நாளாக தந்தையர் தினம் உள்ளது. உலகில் முதல் முறையாக தந்தையர் தின கொண்டாட்டம் 1500-களிலேயே நடைபெற்றதாக கூறப்படுகிறது. எனினும், இதனை நிரூபிக்கும் கூற்றுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. தந்தையர் தினத்துக்கான அதிகாரப்பூர்வ பூ ரோஜா ஆகும். அமெரிக்காவில் 1972 முதல் தந்தையர் தினத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 

click me!