இன்போசிஸ் நாராயண மூர்த்தி மருமகன் பிரிட்டனின் புதிய நிதியமைச்சர்

Published : Feb 14, 2020, 04:08 PM IST
இன்போசிஸ் நாராயண மூர்த்தி மருமகன் பிரிட்டனின் புதிய நிதியமைச்சர்

சுருக்கம்

பிரிட்டன் புதிய நிதியமைச்சராக இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், தனது அமைச்சரவையை வியாழக்கிழமை மாற்றி அமைத்தாா். இதில் நிதியமைச்சராக இந்திய வம்சாவளி அரசியல்வாதி ரிஷி சுனக்கை அவர் புதிய நிதியமைச்சராக நியமித்துள்ளார் இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட பிரீத்தி படேல், அலோக் சா்மா ஆகியோரைத் தொடா்ந்து ரிஷி சுனக் பிரிட்டன் அமைச்சரவையில் இணைந்துள்ளாா். எம்பிஏ பட்டதாரியான ரிஷி சுனக், 2015-ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்து வருகிறாா். இவா், நாராயணமூா்த்தியின் மகள் அக்ஷதாவின் கணவராவாா். ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட்டை பெருமளவு ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 2019 தேர்தல் போரிஸ் ஜான்சன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவித் ராஜினாமா செய்தது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சாஜித் ஜாவித் பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் தனது 5 ஆலோசகர்களையும் நீக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நிபந்தனை வைத்தார், ஜாவித் அந்த நிபந்தனையை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தது பிரிட்டன் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஹாம்ப்ஷயரில் பிறந்த ரிஷி சுனக்கிற்கு வயது 39. யார்க்‌ஷயர் ரிச்மோண்ட் எம்.பி.யாக ரிஷி 2015-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். உள்நாட்டு அரசில் அவர் ஜூனியர் அமைச்சராக இருந்தவர் கடந்த ஆண்டு கருவூல தலைமைச் செயலராகப் பதவி உயர்வு பெற்றார். பாகிஸ்தானைப் பூா்விகமாகக் கொண்ட சாஜித் ஜாவித், நிதி அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, ரிஷி சுனக் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!