ஆலங்கட்டி மழையில் சிக்கி விமானம் கடும் சேதம்! 4 எம்.பி.க்கள் உள்பட 200 பயணிகளின் கதி என்ன?

Published : May 22, 2025, 08:17 AM IST
indigo

சுருக்கம்

டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையில் சேதம் அடைந்தது. இந்த விமானத்தில் இருந்த 4 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட 200 பேர் உயிர் தப்பினர்.

Indigo Flight Damaged Hailstorm: டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் வந்த இண்டிகோ விமானம் 6E2142 கடுமையான ஆலங்கட்டி மழையில் சிக்கியது. இதனால் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. கடுமையான காற்று அழுத்தம் காரணமாக பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். ஸ்ரீநகரில் விமானம் தரையிறங்கிய பின்னர் அனைத்து பயணிகளும், விமான ஊழியர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இண்டிகோ விமானம் சேதம்

நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது. டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலையை எதிர்கொண்டது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியது. இதனால் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. விமானி மாலை 6.30 மணிக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார்.

பயணி பதிவு செய்த வீடியோ வைரல்

விமானத்தில் இருந்த ஒரு பயணி இந்த சம்பவத்தை வீடியோவாக ப‌திவு செய்தார். மோசமான வானிலையால் தொடர்ந்து விமானத்தின் மீது ஆலங்கட்டிகள் விழுவது வீடியோவில் பதிவாகி இருந்தது. மேலும் விமானத்தின் உட்புறம் கடுமையாக குலுங்கியது. பயணிகள் சிலர் பயத்தில் அலறியதும் வீடியோவில் பதிவாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியது. மிக மோசமான வானிலைக்கு மத்தியிலும் விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கி 200 பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.

விமானத்தில் சிக்கிய 4 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்

ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரெக் ஓ'பிரையன், நதிமுல் ஹக், சாகரிகா கோஷ், மம்தா தாக்கூர் மற்றும் திரினாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் மனாஸ் பூனியா ஆகியோர் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு பயணம் செய்திருந்தனர். விமானம் ஆலங்கட்டி மழையில் சிக்கியதால் அவர்கள் அச்சம் அடைந்தனர்.

விமானிக்கு நன்றி

"இது ஒரு மரண அனுபவம். என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். மக்கள் அலறினர், பிரார்த்தனை செய்தனர், பீதியடைந்தனர். ஆனாலும் அதைக் கடந்து எங்களை பத்திரமாக அழைத்துச் சென்ற விமானிக்கு நன்றி. நாங்கள் தரையிறங்கியபோது விமானத்தின் மூக்கு பகுதி சேதம் அடைந்திருப்பதை கண்டோம்'' என்று சாகரிகா கோஷ் தெரிவித்துள்ளார்.

இண்டிகோ விமானம் வெளியிட்ட அறிக்கை

இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட இண்டிகோ விமானம் "டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 2142 வழியில் திடீரென ஆலங்கட்டி மழையில் சிக்கியது. விமானிகள் நெறிமுறைகளைப் பின்பற்றினர். மேலும் விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானம் வந்த பிறகு, விமான நிலையக் குழு வாடிக்கையாளர்களின் நலனுக்கும் வசதிக்கும் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்தது'' என்று கூறியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!