XE recombinants virus: இந்தியாவில் பதிவானது முதல் XE வகை கொரோனா வைரஸ்… மும்பையில் கண்டறியப்பட்டதாக தகவல்!!

By Narendran S  |  First Published Apr 6, 2022, 5:49 PM IST

இந்தியாவில் மும்பையில் முதல் XE வகை கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தியாவில் மும்பையில் முதல் XE வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி 19 ஆம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக XE வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் திரிபு என தெரிவிக்கப்பட்டது. பிரிட்டனில் இந்த வைரஸ் பாதிப்புகள் இதுவரை 600க்கும் கீழ் பதிவாகியுள்ளது. ஒமைக்ரானின் BA.2  துணை மாறுபாடு கொரோனாவின் மிகவும் தீவிரமானதாக கருதப்பட்டது. XE தொடர்பான இந்த புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கொரோனா வகையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள XE எனும் புதிய மாறுபாடு, ஒமைக்ரானின் BA.1 மற்றும் BA.1 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பு என தெரிவிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்த புதிய வகை வைரஸ் ஒமிக்ரானை விட அதிகமாகப் பரவக் கூடியதாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. XE என்பது ஒமைக்ரானிலிருந்து உருமாறிய வைரஸ்களான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து உருமாறியுள்ளது. புதிய XE வைரஸானது ஒமிக்ரானின் BA.2 பிறழ்வைவிட 10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது எனவும், BA.2 உடன் ஒப்பிடும்போது அதன் சமூகப் பரவல் 10% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

இதுபற்றி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னளில் பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், ஒரு நபர் பலவகை வைரஸ் திரிபுகளால் பாதிக்கப்படும் போது, அவற்றின் மரபுப்பொருள்கள் அனைத்தும் ஒன்றாகக் கலந்து புதிய உருமாற்றம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த உருமாற்றம் அடைந்த XE வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஒருவருக்கு இந்த உருமாற்றம் அடைந்த XE வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. நேற்று 376 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் 230 மாதிரிகள் மும்பையை சேர்ந்தவை. 230 மும்பை மாதிரிகளில், 228 பெருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஒருவருக்கு உருமாற்றமடைந்த கப்பா வகை கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. மேலும் ஒருவருக்கு XE வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

click me!