பாக்.,- இந்திய எல்லையில் போர் பதற்றம்... டெல்லியில் ரெட் அலர்ட்..!

By Thiraviaraj RMFirst Published Feb 28, 2019, 11:51 AM IST
Highlights

இந்தியா-பாகிஸ்தான் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தியா-பாகிஸ்தான் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள எண்ணெய், எரிவாயு கிடங்குகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட், பஞ்சாப் மாநிலம் பட்டின்டா, குஜராத்தின் ஜாம்நகர் உள்ளிட்ட இடங்களில் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனையடுத்து, ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ வாகன நிறுத்துமிடங்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு மணி நேர நிலவரமும் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விமானப் படைத்தளங்கள், கடற்படைத் தளங்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. மும்பை, அமிர்தசரஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 

click me!