நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி... 670 பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்தது இந்தியன் ரயில்வே!!

Published : Apr 29, 2022, 06:27 PM IST
நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி... 670 பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்தது இந்தியன் ரயில்வே!!

சுருக்கம்

நிலக்கரி விநியோகம் செய்யும் வகையில், 670 பயணிகள் ரயில் சேவையை இந்தியன் ரயில்வே ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

நிலக்கரி விநியோகம் செய்யும் வகையில், 670 பயணிகள் ரயில் சேவையை இந்தியன் ரயில்வே ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் உற்பத்தி ஆகும் 70% மின்சாரம் நிலக்கரியில் இருந்து தான் பெறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியதை அடுத்து மின்தேவை அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ மற்றும் அரசு மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதே போன்று மாநிலங்களிலும் நிலக்கரி இருப்பு குறைந்துள்ளது. இதை அடுத்து மாநிலங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்கும்படி மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் மின்சாரம் உற்பத்தி தடைபட்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு அதிகரித்து வருகிறது.

டெல்லியில் குறைந்தது 21 நாட்களாவது நிலக்கரி கையிருப்பு இருக்க வேண்டும். ஆனால், ஒரு நாளுக்கும் குறைவான நிலக்கரியே மின் உலைகளில் உள்ளன. இதே நிலைமை தான் மற்ற மாநிலங்களுக்கும் உள்ளது. இந்த நிலையில் நிலக்கரி விநியோகம் செய்யும் வகையில், 670 பயணிகள் ரயில் சேவையை இந்தியன் ரயில்வே ரத்து செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்தடை ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடை தொடங்கி உள்ளதால், மின் தேவையும்அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நிலக்கரி சுரங்கங்களில் இருந்து மாநிலங்களுக்கு நிலக்கரியை சரக்கு ரயிலில் எடுத்துச்செல்லும் வகையில், பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனல் மின் நிலையங்களுக்கு, விரைவாக நிலக்கரியை எடுத்துச் செல்லும் வகையில், சில எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கடந்த நாட்களில் 670 நடைகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே சார்பில் நாள்தோறும் 400க்கும் அதிகமான பெட்டிகள் மூலம் நிலக்கரி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பை உறுதி செய்யும் அடுத்த இரு மாதங்களுக்கு இந்த சேவை தொடரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tirumala Free Bus Service: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. இலவசமாக பயணிக்கலாம்
8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? பென்ஷன் ரூ.57,000 வரை உயருமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் பலன் என்ன?