Mohan Bhagwat RSS: வன்முறையால் யாருக்கும் பயனில்லை; ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அட்வைஸ்

Published : Apr 29, 2022, 04:54 PM ISTUpdated : Apr 29, 2022, 04:55 PM IST
Mohan Bhagwat RSS: வன்முறையால் யாருக்கும் பயனில்லை;  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அட்வைஸ்

சுருக்கம்

Mohan Bhagwat RSS :வன்முறையால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைந்து, மனிதநேயத்தைப் பாதுகாப்பது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தினார்.

வன்முறையால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைந்து, மனிதநேயத்தைப் பாதுகாப்பது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தினார்.

மாகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு குழுக்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. நான் சொல்வதுஎன்னவென்றால், வன்முறையால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. 

வன்முறையை விரும்பும் சமூகம் தனது கடைசி நாட்களை இப்போது எண்ணிக் கொண்டிருக்கிறது. நாம் எப்போதும் அஹிம்சைவாதிகளாகவும், அமைதியை விரும்புபவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து மனித நேயத்தை காப்பது அவசியமாகும். மனித நேயத்தைப் பாதுகாக்க அனைவரும் அஹிம்சையைப் பின்பற்ற வேண்டும். இந்தப் பாதைக்குத்தான் அதிக முக்கிய முன்னுரிமை அளிக்க வேண்டும்.

சிந்து மொழி மற்றும் கலாச்சாரம் அழியாமல் இருக்கவும், காக்கவும், சிந்து பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும். இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்டு, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்தும் உண்டு.

இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!