லண்டனுக்கு எஸ்கேப்? ராணா கபூர் கைதைத் தொடர்ந்து மகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

By ezhil mozhiFirst Published Mar 9, 2020, 7:20 PM IST
Highlights

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக விளங்கிய யெஸ் பேங்கின் இணை நிறுவனர் ரானா கபூர். கடந்த சில மாதங்களாக யெஸ் பேங்க் பெரிய நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது.

லண்டனுக்கு எஸ்கேப்?.......ராணா கபூர் கைதைத் தொடர்ந்து மகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்......

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் ெயஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் அமலாக்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மகளும், இணை இயக்குநரான  ரோஷினி கபூர் லண்டனுக்கு நேற்று தப்பிச் செல்ல முயன்றபோது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக விளங்கிய யெஸ் பேங்கின் இணை நிறுவனர் ரானா கபூர். கடந்த சில மாதங்களாக யெஸ் பேங்க் பெரிய நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலைமையை காரணம் காட்டி அந்த வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது.  மேலும் அந்த வங்கியின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இதனை தொடர்ந்து சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக யெஸ் பேங்க் நிறுவனர் ரானா கபூரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி சட்டவிரோ பணபரிமாற்றம் குற்றச்சாட்டின்கீழ் அவரை கைது செய்தது. நேற்று சிறப்பு நீதிமன்றமத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ரானா கபூரை மார்ச் 11ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதற்கிடையே ரானா கபூரின் 3 மகள்கள் மற்றும் மருமகன் ஆதித்யா உள்பட அவரது ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ரானா கபூரின் மகள்களில் ஒருவரான ரோஷினி கபூர் லண்டன் செல்வதற்காக நேற்று மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். ஆனால் லுக்அவுட் நோட்டீஸ் காரணமாக அவரை லண்டன் செல்ல விடாமல் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் இருக்கும் நிலையில், அவர் லண்டன் செல்ல முயற்சி செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

click me!