
Ahmedabad Air India Flight Accident : குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 5 முதல் 10 நிமிடத்திலேயே விபத்துக்குள்ளானது. இதில், 2 விமானிகள், 10 விமான பணியாளர்கள் உள்பட விமானத்தில் பயணம் செய்த 230 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி விமானம் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அந்த கட்டிடத்தின் 2 மாடிகள் தீயில் கருகியது. இதில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
விமானத்தில் 169 இந்தியர்கள், 53 இங்கிலாந்து நாட்டினர், கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 போர்த்துகீசியர்கள் இருந்தனர். இந்த நிலையில் விமான விபத்து குறித்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: "இன்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்த்தனைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் என் எண்ணங்கள்" என்று பதிவிட்டார்.
இதே போன்று ரோகித் சர்மாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: அகமதாபாத்தில் இருந்து மிகவும் சோகமான மற்றும் துயரமான செய்தி. உயிரிழந்த அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்" என்று பதிவிட்டுள்ளார். ஏர் இந்தியா இன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு AI171 விமானம் சென்றதாகக் கூறியது. மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
விமானம் கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கேப்டன் சுமீத் சபர்வால் 8200 மணிநேர அனுபவம் கொண்ட LTC ஆவார். துணை விமானிக்கு 1100 மணிநேர பறக்கும் அனுபவம் இருப்பதாக அதிகாரி மேலும் கூறினார். ATC படி, விமானம் அகமதாபாத்தில் இருந்து 1339 IST (0809 UTC) நேரத்தில் ஓடுபாதை 23 இலிருந்து புறப்பட்டது. இது ATC-க்கு மேடே அழைப்பை விடுத்தது, ஆனால் அதன் பிறகு, விமானம் ATC செய்த அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.
ஓடுபாதை 23 இலிருந்து புறப்பட்ட உடனேயே விமானம் விமான நிலைய சுற்றளவுக்கு வெளியே தரையில் விழுந்தது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும்புகை வந்ததாக அதிகாரி தெரிவித்தார்.
https://www.instagram.com/p/DKzSXoQNPbj/?utm_source=ig_web_copy_link