இந்திய ராணுவம் பாகிஸ்தானை மண்டியிட வைத்தது! ஆதாரங்களுடன் முப்படை அதிகாரிகள் விளக்கம்!

Published : May 12, 2025, 03:10 PM ISTUpdated : May 12, 2025, 03:35 PM IST
Pak Mirage

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? என இந்திய ராணுவத்தின் முப்படை அதிகாரிகளும் விளக்கம் அளித்தனர்.

What happened in Operation Sindoor: பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்தது குறித்து இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவத் தாக்குதலின் புதிய வீடியோவை அவர்கள் வெளியிட்டனர். மேலும் பாகிஸ்தான் ட்ரோன்கள், போர் விமானங்கள், சீனா பாகிஸ்தானுக்கு கொடுத்த போர் விமானம், பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் ஆகியவற்றை அழித்த புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டனர்.

இந்தியா பயங்கரவாதிகளையே குறி வைத்தது

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, ''இந்தியா பயங்கரவாத முகாம்களையே குறிவைத்து தாக்கியது. பயங்கரவாதிகளையும், அவர்களது இலக்குகளையும் தாக்குவதையே நோக்கமாக கொண்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்கியது. இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு கடுமையான பதிலடி கொடுததது.

பாகிஸ்தான் போர் விமானங்கள், ட்ரோன்கள் அழிப்பு

பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் அனைத்தையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தது. பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்ட ஏராளமான ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா போர் வான்வழி வாகனங்கள், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மென்மையான மற்றும் கடினமான கொலை எதிர்-யுஏஎஸ் அமைப்புகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டன. நமது எல்லையை பாதுகாப்பதில் ராணுவம் அனைத்து வகையிலும் உறுதியாக இருந்தது.

ராணுவத்துக்கு துணை நின்ற மத்திய அரசு

பாகிஸ்தான் ஏவிய சீனாவின் பிஎல் 15 ஏவுகணையையும் தாக்கி அழித்துள்ளோம். பாகிஸ்தான் குறிவைத்த அனைத்து இடங்களையும் இந்தியா முன்கூட்டியே கணித்து அதனை முறியடித்தது. இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. தங்கள் விமானப்படை தளங்கள் சேதம் அடைந்ததற்கு பாகிஸ்தானே முழு பொறுப்பாகும். ராணுவத்துக்கு நிதி ரீதியாக, கொள்கை ரீதியாக மத்திய அரசு துணை நின்றது'' என்றார்.

3 மணி நேரத்தில் பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள் அழிப்பு

இதனைத் தொடர்ந்து பேசிய லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், ''கடந்த சில ஆண்டுகளில், பயங்கரவாத நடவடிக்கைகளின் தன்மை மாறிவிட்டது. அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுகிறார்கள். இதனால் தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டினோம். ஆபரேஷன் சிந்தூருக்கு முன்பே வான் பாதுகாப்பு அமைப்பை தயார் செய்து விட்டோம். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் மத வழிபாட்டு தலங்களை குறி வைத்தது. இதற்கு பதிலடியாக 3 மணி நேரத்தில் பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்களை தாக்கினோம். நமது விமானநிலையங்கள் மற்றும் தளவாடங்களை குறிவைப்பது மிகவும் கடினம். நமது விமானப்படை தளங்கள் அனைத்தும் செயல்பாட்டில் உள்ளன. எந்த சேதமும் ஏற்படவில்லை'' என்றார்.

சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பு தோல்வி

இதன்பிறகு பேசிய வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத், ''பாகிஸ்தான் பயன்படுத்திய சீன வான் பாதுகாப்பு அமைப்பு தோல்வி அடைந்து விட்டது. பாகிஸ்தான் அனுப்பிய துருக்கி ட்ரோன்களையும் அழித்தோம். பாகிஸ்தான் போர் விமானங்களால் இந்தியாவின் எல்லையை கூட நெருங்க முடியவில்லை'' என்றார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!