அடுத்த “சர்ஜிகல் ஸ்டிரைக்குக்கு” ராணுவம் ரெடி... மத்திய அரசு பச்சைக்கொடி

 
Published : May 02, 2017, 02:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
அடுத்த “சர்ஜிகல் ஸ்டிரைக்குக்கு” ராணுவம் ரெடி... மத்திய அரசு பச்சைக்கொடி

சுருக்கம்

indian army ready for surgical strike

இந்திய ராணுவ வீரர்கள் இருவரின் தலையை துண்டித்து காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க தயாராகுங்கள், எந்த தடையும் இல்லை என மத்தியஅரசு பச்சை கொடி காட்டி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டம், கிருஷ்ண காட் எல்லைப்பகுதியில் கடந்த ஒருவாரத்துக்கு மேலாக பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள். சிறிய ராக்கெட் குண்டுகள், கையெறி குண்டுகள், தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான்ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய எல்லைப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் 22 சீக்கிய ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த சுபேதார் பரம்ஜித் சிங் தலைமையில் 3 ராணுவ வீரர்கள், 5 பி.எஸ்.எப்.படை வீரர்கள் நேற்றுமுன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து தொடர்ந்து 30 நிமிடங்கள் இந்திய வீரர்கள் மீது ராக்கெட் குண்டுகள் தாக்குதலும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இந்திய வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்திய எல்லைக்குள் 200 மீட்டர் அளவுக்கு புகுந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் எல்லைப்படையினர் 22 சீக்கிய ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த சுபேதார் பரம்ஜித் சிங், 200 பி.எஸ்.எப். பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபில் பிரேம் சாகர் ஆகியோர் இருவரையும் கொன்று, தலையைத் துண்டித்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டு உறவையும் மிகவும் மோசமாக்கி உள்ளது.

ஏற்கனவே இதுபோல் இந்திய ராணுவ வீரர் தலையை துண்டித்து சம்பவத்துக்கு பதிலடியாக கடந்த ஆண்டு செப்டம்பர்

29-ந்தேதி சர்ஜிகல் ஸ்டிரைக்கை இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக நடத்தி, 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளையும், முகாம்களையும் தாக்கி அழித்து திரும்பினர்.

அந்த சம்பவத்துக்கு பின் பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் அடக்கி வாசித்த நிலையில், மீண்டும் காட்டிமிராண்டிச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையே கடந்த 10நாட்களுக்கு மேலாக எல்லைப்பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை நிலவிவரும் நிலையில், இந்திய வீரர்களின் தலையை துண்டித்த செயல் இரு நாடுகளின் உறவில் பெரிய பிளவை ஏற்படுத்தும்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜெட்லி “ ஏற்றுக்கொள்ள முடியாத, மனித நேயமற்ற செயலை பாகிஸ்தான் ராணுவம் செய்துள்ளது. போர் காலத்தில் கூட இப்படி நடக்காது. அமைதியை விரும்பும் நேரத்தில் இப்படி காட்டுமிராண்டித்தனமாக பாகிஸ்தான் ராணுவம் நடந்துள்ளது. இந்த செயலுக்கு இந்திய ராணுவம் நிச்சயம் பதிலடி கொடுக்கும். மக்கள் ராணுவத்தின்மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். உயிர்தியாகம் செய்த வீரர்களின் மரணத்துக்கு தக்க பதிலடி கொடுப்போம்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்திய ராணுவ வீரர்கள் இருவர் தலையை வெட்டி எடுத்துச்சென்ற பாகிஸ்தான் செயலுக்கு தக்கபதிலடி கொடுக்க ராணுவம் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லை என மத்திய அரசு பச்சைக் கொடி காட்டிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இதுதொடர்பாக ராணுவத்தளபதி பிபின் ராவத்தும் நேற்று எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதிக்கு சென்று ஆய்வு, நடத்தி ராணுவ அதிகாரிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, தகுந்த பதிலடியை கொடுக்க வேண்டும் என வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆதலால், விரைவில் அடுத்த ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக்கை இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் நடத்தும் சூழல் உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!