சீன எல்லைக்கு அருகே இந்தியாவின் மெகா திட்டம்!

Published : Jun 13, 2023, 06:05 PM IST
சீன எல்லைக்கு அருகே இந்தியாவின் மெகா திட்டம்!

சுருக்கம்

சீன எல்லைக்கு அருகே 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான மெகா நீர்மின் திட்டத்தை இந்தியா செயல்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளது

இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை அதிகரித்து கொண்டே வருவதற்கிடையே, எல்லையில் கட்டுமானங்களை சீனா நிர்மாணித்து வருகிறது. எல்லையை ஆக்கிரமிக்கும் பணிகளையும் அந்நாடு செய்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், சீன எல்லைக்கு அருகே கடந்த 20 ஆண்டுகளாக கட்டுமான பணியில் இருந்த 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான மெகா நீர்மின் திட்டமான, சுபன்சிறி கீழ்நிலை நீர் மின் திட்டத்தை இந்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளது.

அருணாச்சலப்பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கிடையே ஓடும் சுபன்சிறி ஆற்றின் கீழ் பகுதியில் கட்டப்பட்டு வரும் இந்த நீர் மின் நிலையம், நாட்டின் ஆற்றல் மாற்றத்தின் முக்கிய படி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் நீர்மின் வாரியமான நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் சுபன்சிறி கீழ்நிலை நீர் மின் திட்டத்தின் சோதனை ஓட்டம் ஜூலை மாதம் நடத்தப்படவுள்ளது. 

நீர் மின் நிலையத்தின் முதல் அலகு வருகிற டிசம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இயக்குனர் ராஜேந்திர பிரசாத் கோயல் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் எட்டு அலகுகளும் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரத் தேவையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை விரைவாக சரி செய்யும் திறன் வாய்ந்த நீர் மின்சாரம், சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தின் இடைவிடாத உற்பத்தி அதிகரித்து வருவதால், அதனை சமன்படுத்துவதற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2003ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 2-ஜிகாவாட் சுபன்சிறி கீழ்நிலை நீர் மின் திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளால் தாமதமானது. இதனால், திட்டத்தின் அசல் மதிப்பீட்டை விட மூன்று மடங்கு உயர்ந்து தற்போதைய செலவு 2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இடையே, 8 ஆண்டுகள் நிறுத்தப்பட்ட பணிகளை 2019ஆம் ஆண்டில் தொடர தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

மொழியின் பெயரால் மக்களை பிரிக்க முயலும் அரசியல் கட்சிகள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

“ஒரு நீர்மின் திட்டத்தைக் கட்டத் தொடங்குவதற்கு முன், பல்வேறு துறைகளிடமிருந்து கிட்டத்தட்ட 40 அனுமதிகளைப் பெற வேண்டும். இந்த கட்டத்தில் அனைத்து ஆய்வுகளும் செய்யப்பட வேண்டும். கட்டுமானம் தொடங்கிய பிறகு நிறுத்தப்பட்டால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்”  என நிதி இயக்குனர் ராஜேந்திர பிரசாத் கோயல் கூறியுள்ளார். 

சீனா மற்றும் பாகிஸ்தானுடனான பதட்டமான எல்லைகளில் உள்ள பகுதிகளில் உள்ளூர் பொருளாதாரங்களை உயர்த்துவதற்கான வழியாக பெரிய அணைகள் பார்க்கப்படுகிறது. சுபன்சிறி நீர் மின் திட்டம் முடிவுக்கு வருவதற்கிடையே, நாட்டின் மிகப்பெரிய நீர்மின் நிலையமான 2.9-ஜிகாவாட் டிபாங் திட்டத்திற்கான அனுமதிகளை நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷனால் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

நீர்மின்சாரத்தை ஊக்குவிக்க, பெரிய அணைகளுக்கு சுத்தமான எரிசக்தி அந்தஸ்தை அரசாங்கம் வழங்கியுள்ளது. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விட, நீர்மின்சாரத்தை வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் பொருட்டு இத்தகையை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானம் மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்க நிதி ஆதரவை வழங்கவும் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!
Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!