அடுத்த ஆண்டு செப்டம்பரில் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது.
உலகின் முக்கியமான வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஜி20 என்பது என்று அழைக்கப்படுகிறது.
இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு..ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்.. பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு ! - பரபரப்பு
இந்த அமைப்பின் தலைவர் பதவியை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன. இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் ஜி20 நாடுகளின் மாநாடு முதல் முறையாக இந்தியா தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டமைப்புக்கு வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 2024ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை இந்தியா தலைமை வகிக்க உள்ளது.
தனது தலைமையில் இந்த கூட்டமைப்பு இயங்க உள்ள அடுத்த ஓராண்டுக்கு, 200 மாநாடுகளை கூட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடும் இதில் அடங்கும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“அதிமுகவில் சசிகலா.. நேரம் குறிச்சாச்சு”.. எடப்பாடி பழனிசாமிக்கு திகில் காட்டும் ஓபிஎஸ் ஆதரவாளர் !