
வரவிருக்கும் 2024ம் ஆண்டிற்கான இந்திய குடிவரவு தின விழாவில் சிறப்பு விருந்திராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தன்னால் ஜனவரி 26ம் தேதி அன்று நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க முடியாது என்று அவர் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவுக்குப் பயணம் செய்ய இயலவில்லை என்பதால், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை இந்தியா அழைத்துள்ளதாக சில அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளது. மக்ரோன் தனது வருகையை உறுதிப்படுத்தினால், புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரான்ஸ் தலைவர் ஒருவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்வது இது ஆறாவது முறையாகும்.
மக்ரோனுக்கு முன், முன்னாள் பிரெஞ்சு பிரதமர் ஜாக் சிராக் 1976 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் குடியரசு தின விழாக்களில் தலைமை விருந்தினராக பங்கேற்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேங், நிக்கோலஸ் சர்கோசி மற்றும் ஃபிராங்கோயிஸ் ஹாலண்டே ஆகியோர் 1980, 2008 மற்றும் 2016ம் ஆண்டு ஜனவரி 26 அணிவகுப்பில் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
புதுதில்லி ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது குடியரசு தின விழாவிற்கு தலைமை விருந்தினராக பங்கேற்க பிடனை பிரதமர் மோடி அழைத்ததாக அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி செப்டம்பரில் உறுதி செய்திருந்தார். இருப்பினும், பிடென் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போய்யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு முதல் தொடரும் என்கவுண்ட்டர்.. 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்..
அவர் பங்கேற்காததற்கு காரணம் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், ஜனாதிபதியின் ஸ்டேட் ஆஃப் தி யூனியன் உரை வருகின்ற 2024ம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதிக்கு முன்னர் நடைபெறவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டு அமெரிக்கத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் இந்த உரை மிகவும் முக்கியமானது.