கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்தை கடந்த பாதிப்பு... பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 4வது முன்னேறிய இந்தியா..!

Published : Jun 12, 2020, 10:38 AM IST
கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்தை கடந்த பாதிப்பு... பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 4வது முன்னேறிய இந்தியா..!

சுருக்கம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு 10,956 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சமாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 8,498 ஆக உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்;- கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,97,535ஆக அதிகரித்துள்ளது. 

அதில், 1,41,842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,47,195 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,498 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 97,648 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38,716 பேருக்கும், டெல்லியில் 34,687 பேருக்கும், குஜராத்தில் 22,032 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!