நாளுக்கு நாள் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு... கொரோனா கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே தீர்ப்பு..!

Published : Apr 10, 2021, 11:09 AM IST
நாளுக்கு நாள் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு... கொரோனா கட்டுப்படுத்த  ஊரடங்கு தான் ஒரே தீர்ப்பு..!

சுருக்கம்

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;-  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,05,926 உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 794 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,68,436ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,19,90,859 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 77,567 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 10,46,631 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 36,91,511 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாடு முழுவதும் இதுவரை 9,80,75,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 91.22% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.28% ஆக அதிகரித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்! அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு உத்தரவு!
மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!