
இந்திய - பாக். எல்லையில் நிலவும் அசாதாரணமான சூழலை எதிர்கொள்ள முழு தகுதியோடும், பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளோடும் இரப்பதாக இந்திய விமானப்படையின் மூத்த தலைவர் அருப் ராகா தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி மாவட்டத்தில் பாக். தீவிரவாதிகள் இந்திய ராணுவ முகாம்கள் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிரிந்தனர். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களை அடுத்து, இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருவதால் எல்லையில் பதற்றம் எற்பட்டுள்ளது. இதன் காரணமாக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தரைவழி ராணுவம், கப்பல் படை, விமானப்படை என முப்படைகளும் எவ்வித அசாதாரணமான சூழலையும் எதிர்கொள்ள முழுத் தகுதியோடும், பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளோடும் இருப்பதாக இந்திய விமானப் படையின் மூத்த தலைவர் அருப் ராகா தெரிவித்துள்ளார்.
இதனிடையே கார்கில் பகுதிக்கு இன்று சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள ராணுவ நினைவிடத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தனார். மேலும், கார்கில் பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலவரம் கறித்தும், முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.