ரூ.50,000 கோடிக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள்! பிரான்சுக்கு கடிதம் எழுதி உறுதி செய்தது இந்தியா!

By SG Balan  |  First Published Oct 28, 2023, 3:45 PM IST

அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வரவிருக்கும்  நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தொடங்குவதற்கு முன், இந்த இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது சவாலாக இருக்கும்.


விடுத்ததன் மூலம் பிரான்சில் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை வாங்குவதற்கான கோரிக்கையை இந்தியா பிரான்ஸ் அரசுக்கு முறைப்படி அனுப்பியுள்ளது. இந்த மெகா ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.50,000 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

22 ஒற்றை இருக்கை ஜெட் விமானங்கள் மற்றும் நான்கு இரட்டை இருக்கை பயிற்சி விமானங்கள், ஆயுதங்கள், சிமுலேட்டர், உதிரிபாகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தத்திற்காக, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் பிரான்சு ராணுவ இயக்குனரகத்திற்கு விரிவான கோரிக்கை கடிதம் (LoR) அனுப்பப்பட்டுள்ளது.

Latest Videos

அக்டோபர் 10-11 தேதிகளில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் பயணம் மேற்கொண்டு திரும்பியதன் தொடர்ச்சியாக இந்த ஒப்பந்தம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சைச் சேர்ந்த டசால்ட் நிறுவனம் இந்த விமானங்களைத் தயாரிக்க உள்ளது.

சிங்கப்பூர் சின்னையாவுக்கு 16 ஆண்டு சிறை, 12 பிரம்படி! பலாத்கார வழக்கில் தமிழருக்கு கொடிய தண்டனை!

"பிரான்ஸ் தங்கள் சலுகை, விலை மற்றும் பிற விவரங்களுடன் ஓரிரு மாதங்களில் இந்தியாவுக்கு பதிலளிக்கும். விலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைச்சரவைக் குழுவின் இறுதி ஒப்புதல் ஆகியவற்றுக்குப் பிறகு ஒப்பந்தம் கையெழுத்தாகும். அடுத்த மூன்று ஆண்டுகளில் விமானங்களின் விநியோகம் தொடங்கும்” என்று பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், சுமார் 30,000 கோடி ரூபாய்க்கு டீசல் - எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையும் எம்டிஎல் (MDL) நிறுவனத்துடன் நடந்துவருகிறது. பிரான்சு கடற்படை குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் இதற்காக தற்போது இந்தியா வந்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் குறைந்தது 60% உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

பாரிஸில் கடந்த ஜூலை மாதம் நடந்த மோடி - மேக்ரான் உச்சிமாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக இவ்விரு ஒப்பந்தங்களுக்கான தேவை இருப்பதையும் பாதுகாப்புத்துறையின் பூர்வாங்க ஒப்புதலையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிசெய்துவிட்டார். அவரது தலைமையிலான பாதுகாப்புத்துறை கவுன்சில் ஜூலை 13 இந்த முடிவை எடுத்தது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா பொதுத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தொடங்குவதற்கு முன், இந்த இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது சவாலானதாக இருக்கும்.

இதற்கு முன் 2016 செப்டம்பரில் 36 ரஃபேல் போர் விமானங்களுக்கு ரூ.59,000 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, இந்த ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். ஆனால் மத்திய அரசு அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தது. இந்த  விவகாரம் தேர்தலிலும் சிறிது எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

26 பில்லியன் டாலரை வாரி இறைத்த கூகுள்! எல்லா இடத்திலும் குரோம் ஆதிக்கம் எப்படி வந்துச்சு தெரியுமா?

click me!