ஆசியாவிலேயே ஊழல் மலிந்த நாடு இந்தியா தான்... போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கை

Asianet News Tamil  
Published : Sep 01, 2017, 06:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
ஆசியாவிலேயே ஊழல் மலிந்த நாடு இந்தியா தான்... போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கை

சுருக்கம்

India is the worlds top corruption scandal in Asia.

ஆசியாவிலேயே ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. பெரும்பாலான அரசின் சேவைகளை மக்கள் லஞ்சம் கொடுத்துதான் பெறுகிறார்கள் என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பெர்லினைச் சேர்ந்த ஊழல் கண்காணிப்பு தன்னார்வ அமைப்பு ‘டிரான்ஸ்பரன்ஷிஇன்டர்நேஷனல்’(டி.ஐ.) ஆகும். இந்த அமைப்பு 16 நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேரிடம் 18 மாதங்கள் ஊழல் குறித்து கள ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவுகள் குறித்து போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.  அதில் கூறப்பட்டு இருப்பதாவது.

ஆசியாவில் நாடுகளில் வளர்ந்து வரும் பிரச்சினையாக இருப்பது ஊழலாகும். ஆசியாவில் உள்ள ஊழல் மலிந்த 5 முக்கிய நாடுகளாக வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர், இந்தியா இருக்கின்றன. இதில் இந்தியாதான் ஆசியாவிலேயே ஊழலில் முதலிடத்தில் உள்ளது.

ஊழல் குறித்த தரவரிசையில் இந்தியா 69 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. அரசின் 6 முக்கிய சேவைகளான கல்வி, மருத்துவம், அடையாள அட்டை பெறுதல் உள்ளிட்டவைகளில் 5 சேவைகளைக் பெறுவதற்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக கருத்துக்ிகணிப்பில் பங்கேற்ற மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக எந்தநாட்டைக் காட்டிலும் நம்நாட்டில் மக்கள் கல்விச்சேவையைப் பெற அதிகபட்சமாகவும், மருத்துவச் சேவையைப் பெற அதிகமாகவும் லஞ்சம் கொடுக்கிறார்கள்.

அதேசமயம், இந்த கட்டுரையில், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்தும், அவர் ஊழலை ஒழிக்க எடுத்துவரும் முயற்சிகள், நடவடிக்கைகள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி ஊழலை ஒழிக்க தீவிரமாக செயல்படுகிறார் என்று கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மக்களில் 53 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பிரதமர் செயல்படுகிறார், மாற்றத்தை கொண்டுவர முயல்கிறார் என்பதை உணர்கிறோம் என்று 63 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்டை நாடான பாகிஸ்தான் ஊழலில் ஆசியாவில் 4-வது இடத்தில் உள்ளது. அங்கு போலீசாருக்குதான் அதிகமாக லஞ்சம் கொடுப்பதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

கடந்த ஆண்டு இந்த அமைப்பு நடத்திய ஆய்வில், 168 நாடுகளில் ஊழலில் இந்தியா 76-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து ஊழலை ஒழிப்பதில் எந்த விதமான முன்னேற்றமில்லாமல் தொடர்ந்து, பின்தங்கியே இந்தியா உள்ளது.

PREV
click me!

Recommended Stories

4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?