குடியரசுத் தலைவர் அளித்த ஜி20 தலைவர்களுக்கான விருந்தில் இந்தியாவின் பன்முக இசை பாரம்பரியம் காட்சிப்படுத்தப்பட்டது
இந்தியா தலைமையின் கீழ் ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. ஜி20 தலைவர்கள் சிறப்பான அனுபவங்களை பெறும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளையும் அவர்களுக்காக இந்தியா செய்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நேற்றைய கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, ஜி20 தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரவு விருந்து அளித்தார். அந்த விருந்தில் இந்தியா தனது பன்முக இசை பாரம்பரியத்தை உலகிற்கு வெளிப்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய இசை அப்போது ஒலிக்கப்பட்டது.
undefined
ஜி20 இரவு விருந்து: உலகத் தலைவரகளுடன் பிரதமர் மோடி!
அதில் 'காந்தர்வ ஆராத்யம்' என்பது முக்கியமானது. காந்தர்வ ஆராத்யம் குழுவினரின் பாரத் வத்ய தர்ஷசனம் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இது இந்தியா முழுவதிலும் உள்ள இசைக்கருவிகளின் நேர்த்தியான சிம்பொனியை உள்ளடக்கிய தனித்துவமான இசைக் கலவையாகும். இந்துஸ்தானி, கர்னாடக, நாட்டுப்புற, சமகால இசை மற்றும் பாரம்பரிய இசைக்கருவிகளின் கலவையாக இடம்பெற்றது.
ஒலிக்கப்பட்ட இசை
இந்துஸ்தானி இசை: ராக தர்பாரி காந்தா மற்றும் காஃபி-கெலத் ஹோரி
நாட்டுப்புற இசை: ராஜஸ்தான் - கேசரிய பலம், கூமர் மற்றும் நிம்புரா நிம்புரா
கர்னாடக இசை: ராக மோகனம் - ஸ்வகதம் கிருஷ்ணா
நாட்டுப்புற இசை: காஷ்மீர், சிக்கிம் மற்றும் மேகாலயா - போம்ரு போம்ரு
ஹிந்துஸ்தானி இசை: ராக தேஷ் மற்றும் ஏகலா சலோ ரே
நாட்டுப்புற இசை: மகாராஷ்டிரா - அபிர் குலால் (அபாங்), ரேஷ்மா சாரே கானி (லாவ்னி), கஜர் (வர்காரி)
கர்நாடக இசை: ராகம் மத்யமாவதி - லக்ஷ்மி பாரம்மா
நாட்டுப்புற இசை: குஜராத்- மோர்பானி மற்றும் ராம்தேவ் பீர் ஹலோ
பாரம்பரிய மற்றும் பக்தி இசை: மேற்கு வங்காளம் - பாட்டியாலி மற்றும் அச்யுதம் கேசவம் (கீதங்கள்)
நாட்டுப்புற இசை: கர்நாடகா - மது மேகம் கண்ணை, காவேரி சிந்து மற்றும் ஆட் பாம்பே
பக்தி இசை: ஸ்ரீ ராம் சந்திர கிருபாலு, வைஷ்ணவ் ஜனா மற்றும் ரகுபதி ராகவ்
இந்துஸ்தானி, கர்னாடிக் மற்றும் நாட்டுப்புற இசை: ராக் பைரவி- தாத்ரா, மைலே சுர் மேரா தும்ஹாரா
அரிய கருவிகள் பயன்படுத்தப்பட்டன
இசைக்கலைஞர்கள் ராவணஹதா, ருத்ரவீணை போன்ற இசைக்கருவிகளைக் கொண்டு மிகவும் அற்புதமான கச்சேரியை நடத்தினர். ஜி20 விருந்தின் போது வழங்கப்பட்ட இசை நிகழ்ச்சியில் பல அரிய இசைக்கருவிகளை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. சுர்சிங்கர், மோகன் வீணை, ஜல்தரங், ஜோடியா பவ, தங்கலி, தில்ருபா, சாரங்கி, கமைச்சா, மட்ட கோகிலா வீணை, நல்தரங், துங்புக், பகாவாஜ், ரபாப், ராவணஹதா, தல் டானா, ருத்ர வீணை போன்றவை இதில் அடங்கும். தபேலா, பியானோ போன்ற கருவிகளைக் கொண்டும் கலைஞர்கள் இசைக்கச்சேரியை நடத்தினர்.
இந்தியா இந்த பன்முக இசை பாரம்பரியத்தை உலக நாடுகளின் தலைவர்கள் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர்.