இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி... மேலும் ரூ.12,500 கோடி கடன் வழங்க இந்தியா முடிவு!!

Published : Apr 14, 2022, 07:58 PM IST
இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி... மேலும் ரூ.12,500 கோடி கடன் வழங்க  இந்தியா முடிவு!!

சுருக்கம்

கடும் பொருளாதார நெருக்கடி சிக்கியுள்ள இலங்கைக்கு மேலும் ரூ.12 ஆயிரத்து 500 கோடி கடனாக வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. 

கடும் பொருளாதார நெருக்கடி சிக்கியுள்ள இலங்கைக்கு மேலும் ரூ.12 ஆயிரத்து 500 கோடி கடனாக வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனை சமாளிக்க முடியாமல் ரச்ஜபக்சே தலைமையிலான அரசு திணறி வருகிறது. மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரிசி, காய்கறிகள், பால் , மளிகை போன்ற உணவுப் பொருட்களின் விலை வின்னை முட்டும் அளவிற்கு உயந்துள்ளது. நாள்தோறும் 13 மணி நேர மின்வெட்டால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒருபுறம் மருந்து பொருட்கள் கிடைக்காமல் அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  தொடர் மருந்து எடுத்துக்கொள்ளும் நோய் பாதிப்புடையவர்கள் மிகுந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

மறுபுறம் பெட்ரோல், டீசலுக்காக மக்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்த நிலைக்கு அரசு தான் காரணம் எனக்கூறு இலங்கை மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றன. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே இந்தியாவிடம் உதவி கேட்டிருந்த இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடன் உதவி அளிப்பதாக இந்தியா அறிவித்து. அதன்படி சுமார் 40 டன் டீசல் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. சிங்கள புத்தாண்டை ஒட்டி நேற்று முன் தினம் 11 ஆயிரம் டன் அரிசியை இந்தியா வழங்கியது. இந்தியா வழங்கிய டீசல் தீர்ந்துவருவதால், மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் இந்தியாவின் உதவியை நாடியிருக்கிறது இலங்கை. 2 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.15,200 கோடி) கடனாக  வழங்க இலங்கை கேட்டுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்து வரும் இந்தியா, கடனை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கேட்கும் ரூ.15,200 கோடியை இந்தியா விரைவில் வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இதுவரை, அத்தியாவசிய பொருட்கள், எரிபொருட்கள், நாணய பரிமாற்றங்கள் என மொத்தமாக சுமார் ரூ.14 ஆயிரம் கோடியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதேபோல் சீனாவும் சுமார் ரூ. 21 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏதோ தவறு நடக்கிறது? கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சந்தேகத்தை கிளப்பும் உச்ச நீதிமன்றம்!
Indigo: மீண்டும் நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கும் இண்டிகோ! கிஃப்ட் வவுச்சர், இழப்பீடு என தாராளம்.!