கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை முந்தி 3-ம் இடத்துக்கு சென்ற இந்தியா... எகிறும் எண்ணிக்கையால் பீதியில் மக்கள்!

By Asianet TamilFirst Published Jul 6, 2020, 8:55 AM IST
Highlights

ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.81 லட்சமாக உள்ள நிலையில், இந்தியா ரஷ்யாவை தாண்டியது. இதனால், மூன்றாவது இடத்திலிருந்து ரஷ்யா, நான்காம் இடத்துக்கு சென்றது. இந்தியா மூன்றாம் இடத்துக்கு சென்றது. இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில் 15 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உள்ளன, அமெரிக்காவில் 28 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உள்ளன. 

கொரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை முந்தி இந்தியா மூன்றாம் இடத்துக்கு சென்றது.
உலகை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா ஒரு கோடிக்கும் அதிகமானோரைப் பாதித்தது. கொரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்துவருகிறது. பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இந்த வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்துவந்தது.

 
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது.  மகாராஷ்டிரா, தமிழ் நாடு, டெல்லி, தெலங்கானா, கர்நாடகம், அஸ்ஸாம், பீகார் ஆகிய 7 மாநிலங்கள் மட்டும் 78 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டனர். மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,074 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த மா நிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது.  இதுவரை இந்தியாவில் எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.81 லட்சமாக உள்ள நிலையில், இந்தியா ரஷ்யாவை தாண்டியது. இதனால், மூன்றாவது இடத்திலிருந்து ரஷ்யா, நான்காம் இடத்துக்கு சென்றது. இந்தியா மூன்றாம் இடத்துக்கு சென்றது. இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில் 15 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உள்ளன, அமெரிக்காவில் 28 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உள்ளன. இந்தியாவில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை கூடிவருவதால், வரும் வாரங்கள், மாதங்களில் இந்த எண்ணிக்கையை இந்தியா தாண்டுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

click me!