100 நாள் தொடர்ந்து பணியாற்றிய மனித தெய்வம்.. கடவுள் இருக்கார் குமாரு..!

By vinoth kumarFirst Published Jul 5, 2020, 11:53 AM IST
Highlights

கோவா மருத்துவமனையில்  98 நாட்கள் தங்கியிருந்து கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

கோவா மருத்துவமனையில்  98 நாட்கள் தங்கியிருந்து கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா உருவான சீனாவை விட அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பல மடங்கு உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வேகம் உச்சத்தை எட்டி வருகிறது. பாதிப்பில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும், டெல்லி 3வது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில், கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில், பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் பனாஜியில், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், கொரோனா சிறப்பு பிரிவு உள்ளது. இதில், மருத்துவர் எட்வின் கோம்ஸ் தலைமையில், சிறப்பு மருத்துவ சிகிச்சை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர், கடந்த 98 நாட்களாக மருத்துவமனையிலேயே தங்கியிருந்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தன் வீட்டிற்கு திரும்பினார். அங்கு, எட்வினின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள், அவரது சேவையை பாராட்டி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

click me!