மீண்டும் முதல்ல இருந்தா.. கொரோனா 4வது அலை தொடங்கபோகுதாம்.. எப்போ தெரியுமா?

By vinoth kumarFirst Published Mar 1, 2022, 11:54 AM IST
Highlights

4வது அலையில், ஏற்கனவே போடப்பட்டிருக்கும் 2 தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் ஆகியவை நோயின் தீவிரத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் தொடங்கி ஒமிக்ரானாக உருமாறிய வரையில் தொற்று கடந்த வந்த பாதையை கணித்தே இந்த மாதிரி புள்ளியியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 4ம் அலை தொடங்கும் கால கட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 3வது குறைய தொடங்கி வரும் நிலையில் 4வது அலை தொடர்பாக, கான்பூர் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம் ஆய்வில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த 2020ம் ஆண்டு முதல் அலையாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.  இதன்பின்னர் கடந்த 2021ம் ஆண்டு 2வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.  இதற்கு டெல்டா கொரோனா வகை அடிப்படையாக அமைந்திருந்தது.  அதன்பின், டெல்டா பிளஸ், ஒமிக்ரான் ஆகிய வகைகளாலும் பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் அதிவேக பரவல் கொண்டிருந்தது.  எனினும், உயிரிழப்புகள் அதிக அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் 3வது அலை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் ஏக்கத்துடன் காத்திருந்த நிலையில் தற்போது 4வது அலை தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொரோனா தொற்றின் பரவல் குறித்து புள்ளியியல் அடிப்படையில், கான்பூர் ஐஐடி.யின் கணிதம், புள்ளியியல் துறை மாணவர்கள், கடந்த 4 மாதங்களாக நடத்திய மாதிரி ஆய்வு மேற்கொண்டனர். 

அந்த மாதிரி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்று ஜனவரி 30, 2020ம் ஆண்டில் இருந்து பரவத் தொடங்கியது. அந்த கணக்கின்படி, 936 நாட்களுக்கு பிறகு, இந்தியாவில் அதன் 4வது அலை பரவத் தொடங்கும். எனவே, கொரோனா 4வது அலை ஏறக்குறைய ஜூன் 22ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மத்தியில் அல்லது இறுதியில் ஆகஸ்ட் 23ம் தேதி உச்சத்தை எட்டி, அக்டோபர் 24ம் தேதி குறையத் தொடங்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 4வது அலையில், ஏற்கனவே போடப்பட்டிருக்கும் 2 தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் ஆகியவை நோயின் தீவிரத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் தொடங்கி ஒமிக்ரானாக உருமாறிய வரையில் தொற்று கடந்த வந்த பாதையை கணித்தே இந்த மாதிரி புள்ளியியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 4ம் அலை தொடங்கும் கால கட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
 

click me!