ஊக்க மருந்து பயன்பாட்டில் இந்தியா 3வது இடம் - திடுக்கிடும் தகவல் அம்பலம்

 
Published : Apr 05, 2017, 09:39 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
ஊக்க மருந்து பயன்பாட்டில் இந்தியா 3வது இடம் - திடுக்கிடும் தகவல் அம்பலம்

சுருக்கம்

India 3rd place in the use of drugs Frightened Information Revealing

ஊக்க மருந்து உபயோகிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு சர்வதேச ஊக்க மருந்து சோதனை மையம்ன ‘வாடா’வின் அனுமதி பெற்ற மையங்களில் இருந்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கடந்த 2013, 2014ம் ஆண்டுகளிலும் இந்தியா 3வது இடத்தை பிடித்து இருந்துள்ளது தெரியவந்தது.
இதுவரை இந்தியா சார்பில் இதுவரை 117 பேர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளனர். இதில் 78 வீரர்கள், 37 வீராங்கனைகள் , மீதமுள்ள 2 நபர்கள் குறித்து உறுதியான தகவல் இல்லை.
பளுதூக்குதல் பிரிவில் மட்டும் 56 பேர் சிக்கியுள்ளனர். தடகளத்தில் 21, மல்யுத்தம், குத்துச்சண்டையில் தலா 8 பேர் என ஊக்க மருந்து அருந்திய வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் கபடி (4), ஹாக்கி (1), கால்பந்து (1) வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
விளையாட்டு போட்டிகளில் ஊக்க மருந்து அருந்தியதன் சர்வதேச பட்டியலில், முதல் இரண்டு இடங்களை ரஷ்யா 176 பேர், இத்தாலி 129 பேர் என பிடித்துள்ளன. 

PREV
click me!

Recommended Stories

மாற்றப்படும் நிதின் கட்கரி? மத்திய அமைச்சரவையில் மாற்றமா? உண்மை நிலவரம் என்ன?
ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!