40 நகரங்கள் இடம்பெறும் அடுத்த ஸ்மார்ட் சிட்டி பட்டியல்…ஜுன் மாதம் வெளியிட திட்டம்…

First Published Apr 5, 2017, 8:14 AM IST
Highlights
Next smart city list


40 நகரங்கள் இடம்பெறும் அடுத்த ஸ்மார்ட் சிட்டி பட்டியல்…ஜுன் மாதம் வெளியிட திட்டம்…

மத்திய அரசின் கனவு திட்டமான ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தின் அடுத்த பட்டியல் வரும் ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது. 100 நகரங்களில் ஏற்கனவே  60 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 40 நகரங்கள் இப்பட்டியலில் இடம் பெறவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு வளர்ந்த நாடுகளில், அனைத்து வசதிகளும் உடைய, 'ஹைடெக்' நகரங்களை போல் இந்தியாவிலும் 100 நகரங்களைத் தேர்ந்தெடுத்து சிறந்த நகரங்களாக மாற்றப்படும்  என அறிவித்தது. அதற்கு ஸ்மார்ட் சிட்டி என பெயர் வைக்கப்பட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டது. இதற்காக  பல லட்சம் கோடி ரூபாய் செலவிட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி, உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன், அனைத்து கட்டமைப்பு வசதிகள் அமைந்த நகரங்கள்  உருவாக்கப்படவுள்ளன.

சுத்தமான குடிநீர், தடையற்ற மின்சாரம், பளபளக்கும் சாலைகள், மின்னல் வேக இணைய வசதி, தானியங்கி கழிவு அகற்றல் நடைமுறை, சிறப்பான பொது போக்குவரத்து, டிஜிட்டல்  மயமான பொது சேவைகள், குறைந்த விலையில் வீடு ஆகியவை, ஸ்மார்ட் சிட்டியின் கட்டமைப்பு அம்சங்களாக  மத்திய அரசால் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, மத்திய அரசு, தன் பங்காக, ஐந்து ஆண்டுகளுக்கு, 48 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு நகரத்துக்கும், ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வீதம் செலவிடப்படும். மத்திய அரசு வழங்கும் தொகைக்கு நிகராக, அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து முதலீடு செய்யும்.

 

மத்திய அரசின் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. ஏற்கனவே  60 நகரங்கள் தேர்வாகி உள்ளன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மீதமுள்ள, 40 நகரங்களுக்கான பட்டியல் ஜூன் மாதம் இறுதியில் வெளியிடப்படவுள்ளது. வரும், 2022 ஆம் ஆண்டுக்குள்  இந்தியாவில், 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்பட வேண்டம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 

 

click me!