கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாக, சுதந்திர தின விழா கொண்டாட்டம் களை இழந்திருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்த விட்டதால் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இது அவரது 9-வது சுதந்திர தின உரையாகும்.
கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாக, சுதந்திர தின விழா கொண்டாட்டம் களை இழந்திருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்த விட்டதால் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதால் ‘வீட்டுக்கு வீடு தேசியக் கொடி’ திட்டம் உட்பட பல நிகழ்ச்சிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த விழா அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்த மத்திய அரசு, விழாவை சிறப்பாகக் கொண்டாடுமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டது. இதனால் நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க;- Independence day 2022 india: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடிக்கு ‘புல்லட் ப்ரூப்’ வழங்கப்படுகிறதா?
கடந்த 2-ம் தேதி முதல் பல்வேறு தரப்பினரும் சமூக ஊடக முகப்பில் தேசியக் கொடியை பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பாஜக தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நேற்று முன்தினம் தேசியக் கொடியை ஏற்றினர். இந்த சுதந்திர தனி விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் உட்பட சுமார் 7000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழாவையொட்டி, செங்கோட்டையில் உச்ச கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 1000 கேமராக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைகள் மூலமாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காட்டும், முக அடையாள கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், செங்கோட்டையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு வான் பகுதியில் பட்டம், ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க வருவோர் உணவு, தண்ணீர் பாட்டில், ரிமோட் கன்ட்ரோல் கார் சாவி, சிகரெட்லைட்டர், சிறிய பெட்டி, கைப்பை,கேமரா, பைனா குலர், குடை உள்ளிட்டவற்றைக் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தின உரையிலும் முக்கிய அறிவிப்பு வெளியிடுவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வரிசையில், இன்றும் பிரதமர் மோடி தனது உரையில் சுகாதாரம் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- rss: national flag: rss flag: ஆர்எஸ்எஸ் அமைப்பும் மாற்றியது! சமூக ஊடகத்தில் சுயவிவரப் படத்தில் தேசியக் கொடி