
ராம் மோகன் ராவ் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி வரும் வேலையில் இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ,கூட்டாட்சி முறையை சீர்குலைக்க முயலுகிறது மத்திய அரசு.
ராம்மோகன்ராவ் வீட்டில் சோதனை நடத்துவதற்கு முன் மாநில அரசிடம் தெரிவித்து அவரை பதவி நீக்கம் செய்திருக்கச் சொல்லியிருக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்த நகைச்சுவையான டுவிட்டர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
தலைமை செயலாளர் மீது காண்ட்ராக்டர் ஒருவர் வீட்டில் நடத்திய ரெய்டு அடிப்படையில் கிடைத்த தகவலை வைத்து ரெய்டு வருகிறது. தமிழக அமைச்சர்கள் சிலருடனும் அவருக்கும் அவரது மகனுக்கும் வியாபார தொடர்பு உள்ளது என்ற விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில் , தமிழக அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு வந்து ரெய்டு நடத்துவது எப்படி சாத்தியம் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
மம்தாவின் இந்த விமர்சனமும் கோரிக்கையும் இந்த நேரத்தில் தமிழக மக்கள் நகைச்சுவையாகத்தான் பார்ப்பார்கள் என்று தெரிவித்தார்.