ஒரு லிட்டர் பாலை ஒரு பக்கெட் தண்ணீல கலந்து விநியோகம் … இது தான் சத்துணவு !!

Published : Nov 29, 2019, 09:10 PM IST
ஒரு லிட்டர் பாலை ஒரு பக்கெட் தண்ணீல கலந்து விநியோகம் … இது தான் சத்துணவு !!

சுருக்கம்

உத்தரபிரசேத மாநிலத்தில் உள்ள  ஆரம்ப பள்ளி ஒன்றில் படிக்கும் 85 மாணவர்களுக்கு, ஒரு லிட்டர் பாலை, ஒரு வாளி தண்ணீரில் கலந்து விநியோகிக்கப்படு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள   சோன்பத்ரா மாவட்டத்தில் சலாய் பன்வா என்ற இடத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 85 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவுடன், ஒரு கிளாஸ் பால் வழங்கப்படுகிறது.

மதிய உணவு திட்டம் தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகள் அந்த பள்ளிக்கு ஆய்வு சென்றனர். அப்போது, மாணவர்களுக்கு ஒரு வாளி நிறைய தண்ணீரில் ஒருலிட்டர் பாலை கலந்து வழங்கியது அவர்களுக்கு தெரியவந்தது. 

போதுமான அளவு பால், தங்களுக்கு வழங்காத காரணத்தினால் தான், அவ்வாறு செய்வதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.பள்ளியில் 85 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு கொடுக்க ஒரு லிட்டர் பால் தான் வழங்குகின்றனர். இதனால், ஒரு வாளி தண்ணீரில் பாலை கலந்து கொடுக்கும்படி ஆசிரியர் கூறினார். இதனால் தண்ணீரில் கலந்து, கொதிக்க வைத்து மாணவர்களுக்கு வழங்குகிறோம் என்று அங்கிருந்த ஊழியர் தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி, மிர்சாப்பூர் மாவட்டத்தில் மதிய உணவு திட்டத்தில், மாணவர்களுக்கு சப்பாத்தியுடன் உப்பு வழங்கப்பட்டது, அங்கு எடுக்கப்பட்ட வீடியோ காட்சி மூலம் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. vv

PREV
click me!

Recommended Stories

சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு! சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!