50 நாளில் 4 ஆயிரம் கணக்குகளில் ரூ.871 கோடி டெபாசிட்....மோடி மாநிலத்தின் ராஜ்கோட்டில் விசாரணை

First Published Jan 8, 2017, 7:25 PM IST
Highlights


குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், சந்தேகப்படும் முறையில் ரூ. 871 கோடி டெபாசிட்செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 50 நாட்களில் 4500 புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன, ஒரே செல்போன் எண், 62 கணக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வருமான வரித்துறை அந்த வங்கியின் செயல்பாடுகளை ஆய்வு செய்யத் தொடங்கி இருக்கிறது.

நாட்டில் கருப்புபணம்  கள்ள நோட்டுகளை ஒழிக்க பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து கருப்புபணம் பதுக்கியவர்கள் தங்களிடம் உள்ளபணத்தை வங்கியில் டெபாசிட் செய்தனர். சில கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யத் தொடங்கினர். ஆனால், கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி தடை வித்தது.

இந்நிலையில், குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடந்த நவம்பர் 8-ந்தேதிக்கு பின், டிசம்பர் 30-ந்தேதி வரை ரூ. 871 கோடி டெபாசிட்செய்யப்பட்டுள்ளது என வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆகமதாபாத் வருமானவரித்துறையினர் அந்த வங்கியில் கடந்த 50 நாட்களாக செய்யப்பட்ட டெபாசிட்கள், தொடங்கப்பட்ட கணக்குகள் குறித்து அறிக்கை கேட்டு ஆய்வ செய்தனர்.

அது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ராஜ்கோட்கூட்டுறவு வங்கியில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், அந்த வங்கியில் ரூ. 871 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும், செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளாகும். இந்த டெபாசிட் அனைத்தும் நவம்பர் 9 முதல் டிசம்பர் 30-ந்ததேதி வரை செய்யப்பட்டுள்ளது

 

 

 

 

 

அதேபோல, ரூ.108 கோடி வங்கியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த 50 நாட்களில் மிக அதிகமான பணம் 25 முறை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூ. 30 கோடிக்கு அளவுக்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அந்த பரிமாற்றம் என்பது கே.ஒய்.சி. விதிமுறைகளை பின்பற்றி நடக்கவில்லை.

இதுவரை செயல்பாட கணக்குகளை கண்டுபிடித்து அதில் ரூ. 10 கோடி அளவுக்குடெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஒரு தனியார்  பெட்ரோலிய நிறுவனம் ரூ.2.53 கோடிடெபாசிட் செய்துள்ளது. ஒரு ஆண்டு முழுவதும் சராசரியாக 5 ஆயிரம் புதிய கணக்குகள் தான் தொடங்க முடியும் என்ற நிலையில், கடந்த 50 நாட்களில் 4551 புதிய வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.  இதில் 62 கணக்குகளுக்கு ஒரேசெல்போன் எண் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் டெபாசிட் செய்யப்பட்டு பணத்துக்கு சொந்தக்காரரின் பான்கார்டு எண், ஆவணங்களில் அவரின் கையொப்பம் என எதுவுமே இடம் பெறவில்லை. இந்த வங்கியின் முன்னாள் இயக்குநர் ஒருவரின் மகன் 30 வங்கிக்கணக்குகளில் ரூ. ஒரு கோடி டெபாசிட் செய்துள்ளார்.  அனைத்து பே சிலிப்புகளும் ஒரே நபரின் பெயரில் இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ராஜ்கோட் கூட்டுறவு வங்கி மீதான வருமான வரித்துறையின் பிடி இறுகுகிறது.

 

click me!