ஒரே நாளில் 82 % கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. உச்சம் தொட்ட கொரோனா.. அவசர அலோசனை

Published : Dec 29, 2021, 09:06 PM IST
ஒரே நாளில் 82 % கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. உச்சம் தொட்ட கொரோனா.. அவசர அலோசனை

சுருக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 82 சதவீதம் அதிகரித்துள்ளது. எந்த நேரத்திலும் உயர் தர மருத்துவ வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 82 சதவீதம் அதிகரித்துள்ளது. எந்த நேரத்திலும் உயர் தர மருத்துவ வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் பொருளாதார தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பையில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் அதிரடியாக 82 சதவீதம் உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து  கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். 

நேற்றைக்கு ஒருநாள் பாதிப்பு 1,377 ஆக இருந்த நிலையில் இன்றைக்கு பாதிப்பு 2,510 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் மும்பையில் 8,060 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் இதுவரை 16,375 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து மீண்டும் ஆக்சிஜன் உருளைகளை ஏற்பாடு செய்தல், படுக்கைகளை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக அதிக வயதுடையோர், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசிகளை செலுத்த தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. 31 ம் தேதி வரை பொது இடங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், புத்தாண்டு வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொது இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாட்டு நடைமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிசெய்யும் வகையில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா விதிகளை மீறும் நிறுனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் 15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதார பணியாளர்கள், முன் களப் பணியாளர்கள், 60 வயது மேற்ப்பட்டோர் உள்ளிட்டோருக்கு 3வது தவணை தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டு, அவர்களது பட்டியலையும் மும்பை நிர்வாகம் தயாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்ட உயர் தர மருத்துவ வசதிகளுடன் கூடியா கொரோனா சிகிச்சை மையங்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை, மும்பை நகரில் மட்டும் 54 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று வாரங்களுக்கு பிறகு மும்பை மாநகரில் கொரோனா பாதிப்பு உச்சம் எட்டியிருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு டிசம்பர் மாத தொடக்கத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது 188 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!