சினிமா தியேட்டர் கும் இருட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபர் கைது… உடந்தையாக இருந்த தாயும் அரெஸ்ட்!!

 
Published : May 14, 2018, 09:05 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
சினிமா தியேட்டர் கும் இருட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபர் கைது… உடந்தையாக இருந்த தாயும் அரெஸ்ட்!!

சுருக்கம்

In kerala industreialist try to rape little gir arrest

கேரளாவில் சினிமா தியேட்டரில் படம் பார்க்கும்போது அருகில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபர் ஒருவரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். அவர்கள் அருகிலேயே அமர்ந்து இந்த ஈனச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள பெரும்பாலான சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடும் போது யாரும் திருட்டுத்தனமாக செல்போனில் படம் பிடிப்பதை தடுக்கவும், சினிமா தியேட்டரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தியேட்டர் ஊழியர்கள் கண்காணிப்பார்கள்.  இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தியேட்டர் நிர்வாகிகள் போட்டுப்பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது.

10 வயது  ஒரு சிறுமியை   60 வயதுக்காரர் ஒருவர் பாலியல் பலாத்காரம்  செய்த  காட்சி அதில் பதிவாகி இருந்தது. படம் தொடங்கியதில் இருந்து அவர் அந்த சிறுமியிடம்  தவறாக  நடந்து கொண்டதோடு பாலியலி வன்முறையிலும் ஈடுபட்டடார்.   அந்த சிறுமி இதுபற்றி தனது அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் அதை கண்டுகொள்ளாமல் படம் பார்ப்பதில் தனது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.

சினிமா தியேட்டரில் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி சைல்டுலைன் அமைப்பு மூலம் சங்கரன்குளம் போலீசில் தியேட்டர் நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில் சிறுமியிடம் தியேட்டரில் செக்ஸ் சில்மி‌ஷம் செய்யும் காட்சி கேரளாவில் உள்ள டி.வி.யில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மலப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இந்த சம்பவம் பற்றி சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரன் விசாரணை நடத்தினார். கண்காணிப்பு கேமரா காட்சியை போலீசார் முழுமையாக போட்டுப் பார்த்த போது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்தவர் தியேட்டரில் இருந்து சொகுசு காரில் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதைவைத்து  தொழில் அதிபரான மைதீன்குட்டியை போலீசார் கைது செய்தனர்.

கைதான தொழில் அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி புகார் செய்தும் அதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சங்கரன்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. 

இவ்வழக்கில் சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாயாரும் தொழில் அதிபர் அருகே இருந்து உள்ளார். ஆனால் முதியவர் சிறுமியிடம் தவறாக நடந்தபோது அதனை அவர் தட்டிக்கேட்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தாயாரின் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!