TB TEST: இந்தியாவில் அதிகரிக்கும் காசநோய் பாதிப்பு! 2021ம் ஆண்டில் 18% அதிகரிப்பு

By Pothy RajFirst Published Oct 29, 2022, 3:13 PM IST
Highlights

2021ம் ஆண்டில் இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை முந்தை ஆண்டைவிட 18சதவீதம் அதிகரித்து 21.40 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பில் குளோபல் டிபி அறிக்கை தெரிவிக்கிறது

2021ம் ஆண்டில் இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை முந்தை ஆண்டைவிட 18சதவீதம் அதிகரித்து 21.40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பில் குளோபல் டிபி அறிக்கை தெரிவிக்கிறது

மத்திய அரசின் பிரதான் மந்திரி டிபி முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், 40 ஆயிரம் மையங்கள் மூலம், 10.45 லட்சம் காசநோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 3வது முறையாக மாடுகள் மீது மோதி விபத்து

உலக சுகாதார அமைப்பு உலகளாவிய காசநோய் குறித்த அறிக்கையை வெளியிட்டது அதில், கொரோனாவின் தாக்கம், சிகிச்சை, காசநோய் பாதிப்பு, தீவிரம் ஆகியவை குறித்து வெளியிட்டுள்ளது. 

அதில் 2020ம் ஆண்டில் இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களைவிட 2021ம் ஆண்டில் 18 சதவீதம் அதிகரித்து, 21.40 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 22 கோடி  பேர் காசநோய் இருக்கிறதா என்பது குறித்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர் .எனத் தெரிவித்துள்ளது.

சமாஜ்வாதி ஆசம் கான் எல்எல்ஏ பதவி பறிப்பு: உ.பி. சட்டப்பேரவையிலிருந்து நீக்கம்: காலியிடமாக அறிவிப்பு

இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.அதில் “ 2021ம் ஆண்டில் காசநோய் என்பது ஒரு லட்சம் பேருக்கு 210 ஆக இருக்கிறது, 2015ம் ஆண்டை அடிப்படையாக வைத்து பார்த்தால் அந்த ஆண்டில் 256 ஆக இருந்தது. ஏற்குறைய 18சதவீதம் குறைத்துள்ளோம், உலகளவில் 11 சதவீதம் சராசரியாக இருக்கும்போது, இந்தியா 7 சதவீதமாகக் குறைத்துள்ளது.

காசநோய் குறைப்பு தரவரிசையில் இந்தியா 36வது இடத்தில் இருக்கிறது. கொரோனா காலத்தில் பல நாடுகள் காசநோய் தடுப்பு சிகிச்சையை சரிவர செய்ய முடியாமல் சிக்கலைச் சந்தித்தன. ஆனால், இந்தியா எந்த விதமான இடையூறும் இன்றி 2020, 2021ம் ஆண்டில் சிகிச்சை அளித்தது. 

கடந்த சில ஆண்டுகளாக காசநோய் ஒழிப்பில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீட்டுவீட்டுக்குச் சென்று மக்களைப் பரிசோதிக்கப்படுகிறது. விரைவாக காசநோய் பாதிக்கப்பட்டவர்ளைக் கண்டுபிடித்து நோய் முற்றாமல் தடுத்து சிகிச்சையளித்து குணப்படுத்துவதே நோக்கமாகும்.

சிக்கனம் கஞ்சத்தனம் அல்ல!அக்.31 உலக சேமிப்பு நாள்: சேமிப்பின் அவசியம், முக்கியம் என்ன?

இந்தியா சமீபகாலமாக காசநோய் கண்டுபிடிப்பில் வலிமையடைந்து, முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மூலக்கூறு நோயஅறிதல் முறை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் காசநோய் கண்டுபிடித்தலை விரிவுபடுத்த உதவியுள்ளன. நாடுமுழுவதும் 4,760 மூலக்கூறு நோய்அறிதல் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

நாடுமுழுவதும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வுகளை உலகளவில் இந்தியா மட்டுமே முடித்துள்ளது என உலக சுகாதார அமைப்பே பாராட்டியுள்ளது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் பாதிப்பை எதிர்கொள்ள காரணமாக இருப்பது சத்தான உணவுகள் இல்லாமல் இருத்தலும், சத்துணவு அளித்தலும்தான். 

2020-21ம் ஆண்டில் நாடுமுழுவதும் காசநோயாளிகளுக்கு நேரடியாக உதவித்தொகை பரிமாற்றத் திட்டத்தில் ரூ.670 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் குடியரசுத் தலைவர் மூலம், பிரதான் மந்திரி டிபி முக்த் பாரத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காசநோயாளிகளுக்கு கூடுதல் மேம்பட்ட சிகிச்சையும் கிடைக்கும்.

click me!