கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசையும், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் அரசாங்கத்தையும் வழங்கியுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசையும், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் அரசாங்கத்தையும் வழங்கியுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பெங்களூரு நகரில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் 75-வது சுதந்திரதினத்தையொட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மோடியைப் பார்த்து பயமா! பாஜக என்ன வேணும்னாலும் செய்யட்டும்! நெஞ்சை நிமர்த்திய ராகுல்
கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, மக்களுக்கான, அனைத்து மக்களையும் சென்றடையக்கூடிய அரசாங்கத்தை நடத்தி வருகிறார்.
சீர்திருத்தங்கள் நடைபெறாத துறைகளே இல்லை. ஒட்டுமொத்த சமூகத்தின் நலனை முன்நிறுத்திதான் நாங்கள் பதவிப்பிரமாணம் எடுத்திருக்கிறோம்.
கடந்த 2014ம் ஆண்டுக்குப் முன், இருந்த பிரதமர் பிரதமராக கருதப்படவில்லை. ஒவ்வொரு அமைச்சரும் “அவர்” அல்லது “ அவுங்க”தான் பிரதமர் என்று நம்பினார்கள்.
நன்றி கெட்டவன் இலங்கைகாரன்.. ஹம்பாந்தோட்டையில் சீன உளவு கப்பல்.. நாடாளுமன்றத்தில் அலறிய வைகோ.
அப்போது நாட்டில் கொள்கைரீதியான பக்கவாதம் இருந்தது. ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல்கள் நடந்தன.
அப்போது தொழிலதிபர்களுடன், அரசு அதிகாரிகள் சேர்ந்து செயல்பவதும், விலைவாசி உயர்வும் உச்சத்தில் இருந்தது. எளிதாகத் தொழில் செய்யும் மதிப்பீட்டி்ல இந்தியா தரம்தாழ்ந்து சென்றது.
நேரு,வாஜ்பாய் முட்டாள்தனத்தால் தெபெத், தைவானை இழந்தோம்: சுப்பிரமணியன் சுவாமி விளாசல்
இந்த முடிவுகள்தான் இந்தியாவில் பெரும்பான்மை கொண்ட அரசு உருவாக்க, ஒட்டுமொத்த முடிவு எடுக்க வைத்தது. 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிஅமைத்தது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்